இது மொத்த உலக பொருளாதாரத்தைவிட 20 கோடி மடங்கு பெரிசு!
மாஸ்கோ, நவ.3- உலகின் பிரபல டெக் நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா 20 டெசில்லியன் டாலர் அபராதம் வித்துள்ளது. டெசில்லியனா கேள்விப்பட்டதே இல்லை..
எவ்வளவு தொகை: இலக்கம் 2அய் போட்டு அதன் பிறகு 34 பூச்சியங்களை போட்டால் வரும் தொகை. இது ஒட்டுமொத்த உலக ஜிடிஜியை காட்டிலும் சுமார் 20 கோடி மடங்கு பெரிய தொகையாகும். கூகுள் மீது இவ்வளவு பெரிய நடவடிக்கை எடுக்க என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் உலகில் டெக் நிறுவனங்கள் மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது. இப்போது பெரும்பாலான மக்கள் செய்திகளை அலைபேசி மூலமே தெரிந்து கொள்ளும் நிலையில், இந்த டெக் நிறுவனங்கள் முக்கியமானதாக மாறியுள்ளன.
அபராதம்: அதன்படி உலகின் மிகப் பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்திற்கு இப்போது 20 டெசில்லியன் டாலரை ரஷ்யா அபராதமாக விதித்துள்ளது. ஏன் இவ்வளவு பெரிய அபராதம். இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உக்ரைன்- ரஷ்யா மோதல் பல ஆண்டுகளாகத் தொடர்வது அனைவருக்கும் தெரியும். தாங்கள் ஏன் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்பது உட்பட பல விளக்கங்களை ரஷ்யா தொடர்ந்து அளித்து வருகிறது. அந்த விளக்கங்களை முடக்க முடிவு செய்த யூடியூப் தளம், அதன்படி நடவடிக்கை எடுத்தது.