வடமேற்கே பல்லாயிரக் காவதத்திற்கு அப்புறமுள்ளதும், அய்ரோப்பாக்கண்டத்திலொரு பகுதியுமாகிய ‘ஸ்காந்திநேவியம்’ என்ற இடத்தினின்றும் ‘ஆரியர்’ என்ற சாதியார் புறப்பட்டு நாலா பக்கங்களினுஞ் சென்று சேர்ந்தனர். அவ்வாரியருள் ஒரு பிரிவினர் மத்திய ஆசியாவின் மேற்குப் பாகத்திலுள்ள ‘துருக்கிஸ்தானம்’ என்ற இடத்திற்றங்கினர்.
இவ்விடந்தங்கிய ஆரியர்களே “கைபர்க் கணவாய்’ வழியாக இந்தியாவினுட் புகுந்தனர். அவர்கள் அவ்வாறு புகுந்தமை தமிழர்களது நன்மைக்கோ அன்றித் தீமைக்கோ? இதனையறிவுடையோர் எளிதிலுணர்ந்து கொள்வார்கள்.
(“தமிழ்மொழியின் வரலாறு” பக்கம் 22-23)
குறிப்பு: இவரது இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி.