17 அக்டோபர் 2024 இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி அதாவது மகாராட்டிரா தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலுக்கு இறுதி முத்திரை கொடுக்கும் காட்சி இது.
மோடி – அமித்ஷா – ஜே.பி.நட்டா – நிதின்கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் உள்ளனர். அதாவது வேட்பாளர்களை இறுதி செய்யும் முடிவு மோடியின் கையில் தான் உள்ளது.
அப்படி என்றால் மோடியே முழுக்க முழுக்க வாரிசுகளுக்கு போட்டியிட ஒப்புதல் கொடுத்துள்ளார்.
இதைத்தான் அறிஞர் அண்ணா கூறினார்.
“பேசும் நா இரண்டுடையாய் போற்றி!”
பாஜகவில் அனைத்து தேர்தல்களிலும் புதிய முகங்களுக்கு வாய்ப்பு என்பது இல்லாத நிலைதான், எடுத்துககட்டாக பாலியல் வன்கொடுமை குற்ற வாளியான பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் சிங்கின் மகனுக்கு கைசர்கஞ்ச் தொகுதி கொடுக்கப்பட்டது – அதில் அவர் வெற்றியும் பெற்றார். இந்தத் தொகுதியில் 40 ஆண்டுகளாக பிரிஜ்பூசன் சிங்கின் குடும்பம் மட்டுமே போட்டியிட்டு வருகிறது.
கைசர்கஞ்ச் நாடாளுமன்றத் தொகுதியில் 9 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் பாஜக பிரமுகர்கள் உட்பட பல பாஜக தொண்டர்கள் அங்கே இருப்பார்கள் – அவர்களில் ஒருவர் கூடவா 40 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர்களா உள்ளனர்.
மகாராட்டிராவில் கிட்டத்தட்ட அனைத்து பாஜக வேட்பாளர்களுமே வாரிசுகள்தான். மகாராட்டிராவில் ஒரு பாஜக தொண்டன் கூட இதை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது.
தேவேந்திர பட்னவிஸ் யார்?
தேவேந்திர பட்னவிஸ் சித்தி சோபாவிற்கும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது
அஜித் பவார் யார்?
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநாத் ஷிண்டே முதலமைச்சர் ஏக் நாத் ஷிண்டேவின் மகன் என்பது மோடிக்கு தெரியாதா?
பீகார் இமாம்கஞ்ச் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது ஏன்? இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜிதன் ராம் மாஞ்சி ஒன்றிய அமைச்சராகிவிட்டார். இப்போது அங்கு இடைத்தேர்தல் – தேர்தலில் போட்டியிடுவது யார்? ஜிதன் ராம் மாஞ்சியின் சம்பந்தி அங்கு போட்டியிடுகிறார். அவரது மகன் ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்தியாவையே பரபரப்பாக்கிய பல இளம்பெண்களை சீரழித்த – பிரிஜ்வல் ரேவண்ணா யார்? தேவ கவுடாவின் பேரன். இவரது முழுக் குடும்பமுமே நாடாளுமன்ற, சட்டமன்ற பதவிகளில். இவருக்கு ஓட்டுப்போடச் சொல்லி ஒரே மேடையில் நின்று பிரச்சாரம் செய்தவர்தான் மோடி.
