இந்திய பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு

2 Min Read

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறை வடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் புள்ளிகள் 553 புள்ளிகள் சரிந்து, 79,389 புள்ளிகளாக நிலை கொண்டது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 135 புள்ளிகள் சரிந்து 24,205 புள்ளிகளாக நிலை கொண்டது. இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பப் பெறுவதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
ஆதாரில் அலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதா?

ஆதாரில் அலைபேசி எண் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய UIDAI வசதி செய்து தந்துள்ளது. அதன்படி, UIDAI-வின் https://myaadhaar .uidai.gov.in/verify-email-mobile/en வேண்டும். பின்னர் ஆதார் எண், அலைபேசி எண்ணை உள்ளிட வேண்டும். தொடர்ந்து கேப்ட் சாவை உள்ளிட்டு ஓகே கொடுத் தால், அலைபேசி எண்ணுக்கு கடவுச் சொல் (ஓடிபி) வரும். இதை வைத்து உறுதி செய்யலாம்.

நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் இயல்பைவிட 60 விழுக்காடு
அதிக மழை – புயல் சின்னமும் உருவாகும்

இந்தியா

சென்னை, நவ.1- தமிழ் நாட்டில் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவ மழை இயல்பைவிட 60 சதவீதம் அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்ப தாகவும், 20 முதல் 25- ந் தேதிக்குள் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர்.

60 முதல் 70 சதவீதம் அதிகம் வருகிற 5-ந்தேதியில் இருந்து வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடையஇருப்ப தாக வானிலை ஆய்வாளர் கள் தெரிவிக்கின்றனர். அதன் படி, நவம்பர் மாதத்தில் தமிழ் நாட்டில் சராசரியாக 19செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதத் தில் 25 செ.மீ.முதல் 30 செ.மீ. வரை 4 சுற்றுகளாக மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வா ளர்கள் தெரிவிக்கின்ற னர். இது இயல்பைவிட 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை அதிக மழை ஆகும். இதுமட்டுமல்லாமல், வருகிற 10-ந்தேதி முதல் 30-ந்தே திக்குள் தமிழ்நாட்டின் கட லோர மாவட்டங்களில் குறு கிய காலத்தில் அதிகனமழை யும், இயல்பைவிட அதிக மான மழையும் பதிவாகும் என்றும் கணித்துள்ளனர். அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட வட கடலோர, டெல்டா மாவட் டங்களில் குறுகிய காலத்தில் பெருமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படு கிறது. இதேபோல், தென் கட லோர மாவட்டங்களான புதுக் கோட்டை, ராமநாதபுரம், தூத் துக்குடி, திருநெல்வேலி, கன்னியா குமரிமாவட்டங்களில் நவம்பரில் இயல்பு அல்லது இயல்புக்கு அதிகமாக மழை பதிவாகக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் அதி கனமழைக் கான வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 10-ஆம் தேதியை யொட்டி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ் வுப் பகுதி உருவாக சாதகமான சூழல் காணப்படுவதாகவும், அது மேலும் வலுவடைந்து பருவம ழையை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும், அதிலும் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிக்குள் வங்கக்கடலில் புயல் சின்னம் உரு வாகி தமிழ்நாட்டின் வடகடலோ ரப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *