கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

1.11.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் மேனாள் சிறப்பு உதவியாளரும், ஓபிசி தலைவருமான ஆர்.சி.பி. சிங் ‘ஆப் சாப்கி ஆவாஸ்’ என்ற புதிய கட்சியை நேற்று (31.10.2024) தொடங்கினார்.
* ‘கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைக்கும் பிரச்சாரத்தின் பின்னணியில் இந்தியா உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார்’ என்ற கனடாவின் குற்றச்சாட்டுகள் கவலைக்குரியது; அது குறித்து ஆலோசனை நடத்துவோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் பேட்டி.
* வரவிருக்கும் மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் 76 தொகுதிகளில் காங்கிரஸ்-பாஜக நேரடிப் போட்டி. யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை இந்த தொகுதிகள் முடிவு செய்யும்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது: பிரதமர் மோடி என்ன சொன்னாரோ, அதைச் செய்ய மாட்டார், ஏனெனில், நாடாளுமன்றத்திற்கு வரும்போது, அனைவரையும் நம்பிக்கைக்கு உட்படுத்த வேண்டும், அப்போதுதான் அது நடக்கும். பிரதமர் மோடியின் கருத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி
தி டெலிகிராப்:
* “மோடி இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறவில்லை. எல்லாமே மோசடி. வாக்காளர் பட்டியலில் இருந்து 10,000 பெயர்களை நீக்குகிறார் அல்லது 10,000 முதல் 20,000 புதிய பெயர்களை சேர்க்கிறார். இது உண்மைதான், ஆனால் அதை எப்படி நிரூபிப்பது என்பதுதான் கேள்வி” என காங் கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மகாராட்டிரா துலே மாவட்டத்தில் உள்ள போரடே என்ற கிராமம், சதாரா மாவட்டத்தில் உள்ள மன்யாச்சிவாடி கிராமம், சாங்லி மாவட்டத்தில் உள்ள லங்கர்பேத் மற்றும் பாடலி ஆகிய கிராமங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விழா காற்று மற்றும் ஒலி மாசு இல்லாமல் கொண் டாடப்படுவதை உறுதி செய்கிறோம் என்கின்றனர் கிராம மக்கள்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *