உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில் சமஸ்கிருத குருகுலக் கல்வி முறையாம்
லக்னோ,அக்.30 உத்தரபிரதேசத்தில் ரூ.6 கோடியில் சம்ஸ்கிருத கல்வி உதவித் தொகை திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 28.10.2024 அன்று அறிமுகம் செய்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசி யில் உள்ள சம்பூரனானந்த் சமஸ்கிருத பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச் சியில், ரூ.6 கோடியில் சம்ஸ்கிருத கல்வி உதவித் தொகை திட்டத்தை முதல மைச்சர் யோகி ஆதித்யநாத் அறிமுகம் செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: பழைமையான சமஸ்கிருத மொழியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைவார்கள். மேலும் இதனால் கூடுதலாக 69,195 சம்ஸ்கிருத மாணவர்களுக்கு நிதியுதவி கிடைக்கும். இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
சம்ஸ்கிருதம் தெய்வ மொழியாக கருதப்படுகிறது. அதேநேரம் அது அறிவியல் மொழி ஆகும். கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன துறைகளிலும் இதைப் பயன்படுத்த முடியும். தனி கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த மொழி தொழில்நுட்பக் கல்விக்கும் பொருந்தக் கூடியது ஆகும்.
பாரம்பரிய கல்வி முறைக்கு புத்துயிர் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, குருகுல பாணி உறைவிட பள்ளிகள் தொடங்கப்படும்.
இதன்மூலம் நாட்டின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் கல்வி வலு வடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.