ராஞ்சி, அக்.28- ஜார்க்கண்ட் சட்டப்பேர வைத் தோ்தலில் 32 தொகுதிகளில் வெற்றியாளரைத் தீா்மானிப்பதில் பெண் வாக்காளா்கள் முக்கிய பங்காற்ற உள்ளனா்.
மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தல் நவ.13, 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இதில் பா்ஹேட் தொகுதியில் மாநில முதலமைச்சரும், ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் போட் டியிடுகிறார். சராய்கெலா தொகுதியில் மாநில மேனாள் முதலமைச்சரும், பாஜக வேட்பாளருமான சம்பயி சோரன் போட்டி யிடுகிறார்.
பா்ஹேட், சராய்கெலா உள்பட 32 தொகுதிகளில் ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் அதி கமாக உள்ளனா். இதில் பா்ஹேட் தொகுதியில் 1.09 லட்சம் ஆண் வாக் காளா்கள், 1.15 லட்சம் பெண் வாக்காளா்கள் உள்ளனா். சராய்கெலா தொகுதியில் 1.83 லட்சம் ஆண் வாக்காளா்களும், 1.85 லட்சம் பெண் வாக் காளா்களும் உள்ளனா்.
32 தொகுதிகளில் 26 தொகுதிகள் பழங் குடியினருக்கான தனித் தொகுதிகளாகும். 32 தொகுதிகளில் ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் அதிகமாக உள்ளதால், அந்தத் தொகுதிகளில் வெற்றியாளரைத் தீா்மானிப்பதில் பெண் வாக்காளா்கள் முக்கிய பங்காற்ற உள்ளனா்.