தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீரழிக்கும் மோடி அரசு காங்கிரஸ் குற்றச்சாட்டு

2 Min Read

புதுடில்லி, அக்.27- ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு சீரழிக்கிறது’ என்று காங் கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ் சாட்டினார்.
மேலும், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர்நாடியான இத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயா்த்து மாறும் அவா் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் துக்கான (100 நாள் வேலைத் திட்டம்) நிதி ஒதுக்கீடுகள் இடைவிடாமல் குறைக் கப்படுகின்றன. ஊதிய விகிதங்கள் எந்த மாற்றமுமின்றி தேக்க மடைந்துள்ளன. இப்போது தொழில்நுட்பத்தை மட்டும் முழுமையாக நம்பியிருப்பதன் மூலம் தொழிலாளா்களின் வேலை, நியாயமான ஊதியத்துக்கான உரிமை மறுக்கப்படுறது.

நிகழாண்டு ஜனவரி யில் வேலை உறுதித் திட்டத்துக்கு ஆதார் அடிப்படையிலான பரிவா்த்தனை (ஏபிபிஎஸ்) முறையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று ஊரக வளா்ச்சித் துறை உத்தரவிட்டது.இதற்கு தகுதிப் பெற தொழிலாளா்கள் தங்கள் வேலை அட்டையுடன் ஆதாரை இணைப்பது, இரண்டிலும் பெயா் பொருந்துவது மற்றும் ஆதாருடன் இணைந்த வங்கிக் கணக்கை இந்திய தேசிய பரிவா்த்தனை கழகத்தில் சோ்ப்பது உள்ளிட்ட பல நிபந்தனை களை பூா்த்தி செய்ய வேண்டும்.அமைச்சகத்தின் அறிவிப்பு வெளியான 10 மாதங்களுக்குப் பிறகு, இந்த கொள்கை மாற்றத்தின் பேரழிவு தாக்கம் குறித்த தரவுகள் வெளிவந்துள்ளன.

கல்வியாளா்கள் மற்றும் சமூக ஆா்வலா்களின் கூட்டமைப்பான ‘லிப் டெக்’, திட்டத்தின் வலை தளத்தில் கிடைக்கும் தரவுகளை ஆய்வு செய்தது. அதன்படி, திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து தொழிலாளா்க ளில் 27.4 சதவீதமான 6.7 கோடி போ் மற் றும் பணியிலுள்ள தொழிலாளா்களில் 4.2 சதவீதமான 54 லட்சம் போ் இந்தப் பரிவா்த்தனை முறைக்கு தகுதியற்றவா்களாக உள்ளனா். மிகவும் கவ லையளிக்கும் விஷயமாக, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதங்களுக்கு இடையே திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 84.8 லட்சம் தொழிலாளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இந்த நீக்கம் ஏ.பி.பி.எஸ். பரிவா்த்தனை முறை செயல்படுத்தப்பட்டதுடன் ஒத்துப்போகிறது. இதில் குறைந்தது 15 விழுக்காடு தொழிலாளா்கள் தவறாக நீக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக் கின்றன.

வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்த நபா்களின் மொத்த வேலைநாள்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டை விட 16.6 விழுக்காட்டு குறைந்துள்ளது. ஏபிபிஎஸ் தொடா்பான சிக்கல்கள் மற்றும் நீக்குதல்கள் வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக பாதிக்கலாம்.ஏபிபிஎஸ் பரிவா்த்தனை முறையைக் கட்டாயப்படுத்துவதை ஊரக வளா்ச்சித் துறை கைவிட வேண்டும். மேலும், வேலை உறுதித் திட்டத்துக்கான நிதிநிலை மற்றும் தொழிலாளா்களின் தினசரி ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஜெய்ராம் ரமேஷ் ஒன்றிய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *