தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 24.10.2024 அன்று முகாம் அலுவலகத்தில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படையினரின் வான்வழி சாகச நிகழ்ச்சியை காணவந்து உயிரிழந்த சென்னை மடுவாங்கரை பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மணி ஆகிய 2 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.