தமிழ்நாட்டுக்கு இல்லை – ஆனால் ஆந்திரா, பீகாருக்கு ரூ.6,798 கோடியில் ரயில்வே திட்டங்கள்

2 Min Read

புதுடில்லி, அக். 26- விண் வெளித்துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.1,000 கோடி மூலதன நிதியம் அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
விண்வெளித்துறையில் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறு வனங்களுக்கு உதவ ரூ.1,000 கோடி தொகுப்பு நிதிகொண்ட மூலதன நிதியம் அமைக்க ஒப்புதல் அளிக் கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு, ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விண்வெளித்துறை தனியா ருக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள சுமார் 40 புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க இந்த நிதி பயன்படுத் தப்படும். ‘இன்ஸ்பேஸ்’ அமைப் பின் கண்காணிப்பில் நிதியம் செயல்படும்.

இந்தியாவின் நிலை வலுவடையும்

நிதியின் பயன்பாட்டுகாலம் 5 ஆண்டுகள் ஆகும். முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நிதி தேவை களை பொறுத்து, ஆண்டுக்கு சரா சரியாக ரூ.150 கோடி முதல் ரூ.250 கோடி வரை பயன்படுத்தப்படும்.
நிதியத்தில் முதலீடு செய்யவும் தனியார் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
செயற்கைக்கோள் தொழில் நுட்பம், செயற்கைக்கோள்களை செலுத்தும் ராக்கெட்டுகள், விண்வெளி செயலிகள் ஆகிய வற்றில் புதிய கண்டுபிடிப்பு ஊக்குவிக்கப்படும். அதன்மூலம், விண்வெளித்துறையில் இந்தியாவின் நிலை வலுவடையும், விண்வெளி சீர்திருத்தங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
-இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.6,798 கோடி ரயில் திட்டங்கள்

ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களில் ரூ.6 ஆயிரத்து 798 கோடி செலவிலான ரயில் திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர வைக் குழு ஒப்புதல் அளித்தது.
ஆந்திராவின் புதிய தலை நகராக அமராவதி இயங்கி வருகிறது. அமராவதி வழியாக எர்ருபாலம் முதல் நம்பூரு வரை புதிய ரயில் பாதை அமைக்கப் படுகிறது.
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, குண்டூர் ஆகிய மாவட்டங்கள், தெலங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டம் வழியாக 57 கி.மீ. தூரத்துக்கு இந்த ரயில் பாதை அமைகிறது. இதன்மூலம், அமராவதிக்கு நேரடி ரயில் போக்குவரத்து இணைப்பு கிடைக்கும்.
இந்த பாதை, சரக்குப் போக்குவரத்துக்கும், மக்கள் போக்குவரத்துக்கும் பெரிதும் பயன்படும். இப்பாதையில் 9 புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. 168 கிராமங்களுக்கும், அங்கு வாழும் 12 லட்சம் மக்களுக்கும் ரயில் வசதி கிடைக்கும்.

பீகாரில் இரட்டை ரயில் பாதை

பீகார் மாநிலத்தில் நர்கதியா கஞ்ச்-ரக்சால்- சீதாமரி-தர் பங்கா, சீதாமரி-முசாபர்பூர் ரயில் பாதை, இரட்டை ரயில் பாதையாக மாற்றப்படுகிறது. இதன் தூரம் 256 கி.மீ. ஆகும். இதன்மூலம்,நேபாளம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும்எல்லைப்புற பகுதிகளுக்கு ரயில் இணைப்பு வசதி கிடைக்கும்.

இந்த பாதை, வேளாண் விளைபொருட்கள், உரம், நிலக்கரி, இரும்புத்தாது, உருக்கு, சிமெண்ட் ஆகியவை கொண்டு செல்லப்படும் பாதை ஆகும். இரட்டை ரயில்பாதை ஆக்கப்படுவதால், சரக்குப் போக்குவரத்து வலுவடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட 2 ரயில் திட் டங்கள், ஆந்திரா, தெலங்கானா, பீகார் ஆகிய 3 மாநிலங்களில் 8 மாவட்டங்கள் வழியாக அமை கின்றன.இதன் மூலம் இந்திய ரயில்வேயின் நெட்வொர்க் தூரம் 313 கி.மீ. அதிகரிக்கும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *