உச்சநீதிமன்ற நீதிபதிகள் நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிறுவினார்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதி தேவதை சிலையின் கண்கள் கட்டப்பட்டி ருக்கும், கையில் வாள் இருக்கும்.
தற்போது, வாள், கண்கட்டு அகற்றப்பட்டு, கையில் அரசியல் சாசன புத்தகம், ஆடை அணிகலன்கள், தலையில் கிரீடம், நெற்றித் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைப்பு.
நெற்றியில் ‘திலகம்’ ஏன்? அரசமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பின்மைக்கு உகந்ததா?
இந்துப் பெண்கள் நெற்றியில் திலகம் இருக்கும். அதற்கொரு புராணப் பின்னணி உண்டு. மற்ற மதப் பெண்கள் நெற்றியில் திலகம் இருக்குமா? மதச் சார்பற்ற தன்மை கொண்ட பகுத்தறிவாளர்கள் திலகம் வைத்துக் கொள்வார்களா?
இது எங்கோ இடிக்கிறதே!