தி.மு.க. சிறப்பாக செயல்படுவதால் இ.பி.எஸ். பொறாமைப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை செய்து வருவதாகக் கூறினார். இதனிடையே, மக்களால் ஓரங்கட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி எனவும், ஜோசியரை போல அவர் பேசி வருவதாகவும் விமர்சித்தார்.