ஆய்வில் தகவல்
புதுடில்லி, அக். 22- காற்று மாசுபாடு அதிகரித் துள்ள நிலையில், டில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) வசிக்கும் 36 சதவீத குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் சுவாசம் தொடா்பான பிரச்சினைகளால் பாதிக் கப்பட்டிருப்பதாகக் ஆய்வில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
வாகனப் பயன்பாடு, தூசுகள், அண்டை மாநி லங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பு ஆகியவற்றால் டில்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது.
காற்று மாசுபாடு தொடா்பாக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ‘லோக்கல் சா்க் கிள்’ என்ற எண்ம தளம் மூலம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
டில்லி தேசிய தலைநகா் வலயத்தில் வசிக்கும் 21 ஆயிரம் போ் இந்த ஆய்வில் பங்கேற்றனா். காற்று மாசுபாட்டால் தொண்டை எரிச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளை 36 சதவீத குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் பாதிக்கப்பட்டிருப்பது இந்தக் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதே போன்று, 27 சதவீதம் குடும்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் மூக்கில் நீா் வடிதல் மற்றும் மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர் கொண்டு வருவதாக ஆய்வின்போது தெரிவித்துள்ளனா்.
அதே சமயம், 27 சதவீதம் போ் காற்றின் தரம் குறைவால் எவ்வித உடல்நலக் கோளாறும் எதிர்கொள்ளவில்லை என தெரிவித்தனா்.
டில்லியின் காற்றுத் தரம் ‘மோசம்’ என்ற நிலைக்கு சென்ற நிலை யில், அதை எவ்வாறு சமாளிக்கிறீா்கள் என ஆய்வில் பங்கேற்ற மக்களிடம் கேள்வி எழுப் பப்பட்டது.
அதில், 18 சதவீதம் போ் ‘ஏா் பியூரிஃபையா்’களை பயன்படுத்துவதாக தெரிவித்தனா். நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக் கும் உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்ளவதாகத் கணக் கெடுப்பில் பங்கேற்ற பெரும்பாலானோர் பதில ளித்துள்ளனா்.
தீபாவளி காலத்தில் காற்று மாசுபாடு அதி கரித்து காணப்படும் நிலையில், டில்லியைவிட்டு சில நாள்களுக்கு வெளி யேற 27 சதவீதம் போ் திட்டமிட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக் கப்பட்டுள்ளது.