டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன என ஆய்வறிக்கை தகவல்.
* ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் பாஜக சார்பில் முதலமைச்சர்ர் வேட்பாளராக ஒருவரையும் முன்னிறுத்தவில்லை. உட்கட்சி பூசலே காரணம் என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே.
* கடந்த மூன்று ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் காணவில்லை என உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல். இவர்கள் அனைவரும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியின் மவுனம் வெட்கக்கேடானது என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் விளாசல்.
* தமிழ்நாட்டில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் அது இரு திராவிடக் கட்சிகள் இடையே தான் என்கிறார் இ.பி.எஸ். அணி அதிமுக முனுசாமி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மணிப்பூரில் முன்னணியில் இருந்து வழி நடத்துவது ஏன் பிரதமர் மோடிக்கு கடினமாக இருக்கிறது? என மூத்த எழுத்தாளர் தல்வீன் சிங் கேள்வி.
தி டெலிகிராப்:
* கடந்த ஓராண்டில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது 35 சதவீதம் குறைந்துள்ளது, ஆனால், பெட்ரோலியப் பொருட்களுக்கு அதிக வரி விதித்து, மோடி அரசு ஆதாயம் தேடுகிறது என ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.
* மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு பிரதமர் மோடி வெளிநாட்டில் குடியேறுவார் என லாலு பிரசாத் பேச்சு.
– குடந்தை கருணா