திருவாரூர், அக்.19- திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளரணி மேனாள் செயலாளரும், திருவாரூர் மாவட்ட காப்பாளர் பி.ரத்தினசாமி அவர்கள் மறைவுக்கு திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் வீ.மோகன், மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீர.கோவிந்தராஜ், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, மண்டல மேனாள் தலைவர் க.முனியான்டி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கேசவராஜ், திமுக, மய்ய கமிட்டி தலைவர் தங்கசாமி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, நாகை மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட துணை தலைவர் கி.அருண் காந்தி, மாவட்ட ப.க தலைவர் அரங்க.ஈவேரா, ஆசிரியர் இரா.சிவக்குமார், மாவட்ட விவசாய தொழிலாளரணி தலைவர் க.வீரையன், திருவாரூர் நகர தலைவர் கா.சிவராமன், நகரச் செயலாளர் ப.ஆறுமுகம், மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, மகளிரணி செயலாளர் சி.சரஸ்வதி, கழக சொற்பொழிவாளர் தேவ.நர்மதா, கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் சி.ஏகாம்பரம், செயலாளர் மு.சரவணன், நன்னிலம் ஒன்றிய தலைவர் இரா.தன்ராஜ், ப.க தலைவர் ச.கரிகாலன், ஆசிரியர் இரா.சிவக்குமார், திருவாரூர் ஒன்றிய தலைவர் இரா.கவுதமன், ஒன்றிய துணைத் தலைவர் இரா.ராஜேந்திரன், இளைஞரணி தலைவர் செ.பாஸ்கர், சின்னதுரை, குடவாசல் ஒன்றிய தலைவர் என்.ஜெயராமன், ஒன்றிய துணை செயலாளர் க.அசோக்ராஜ், ஒன்றிய துணை தலைவர் சி.அம்பேத்கர், திருவாரூர் ஒன்றிய தலைவர் இரா.கௌதமன், துணைச் செயலாளர் ஜெ.கனகராஜ், துணை செயலாளர் நடப்பூர் மணி, அமைப்பாளர் சாம்பசிவம், பெரியார் பெருந்தொண்டர் பெ.கோவிந்தசாமி, வடுவக்குடி பழனிச்சாமி, ஆகியோர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
இறுதி இரங்கல் நிகழ்வுக்கு தலைமை கழக அமைப்பாளர் வீ.மோகன் தலைமையில் திருவாரூர் மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீர.கோவிந்தராஜ், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, ஆகியோர் முன்னிலையில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ரத்தினசாமியின் பாடையில் வைத்த உடலை மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி மகளிரணி செயலாளர் சீ.சரஸ்வதி மற்றும் கூடியிருந்த மகளிரணி தோழர்கள் தூக்கி ஊர்வலமாக வந் தார்கள். எந்தவித மூட நம்பிக்கை பழக்க வழக்கங்கள் இல்லாமல் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான கிராம மக்களும், கழகத் தோழர்களும், மாற்றுக் கட்சி நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டனர்.