புதுடில்லி, அக்.18 காஷ்மீா் விவகாரத்தில் இந்தியாவின் தன்னிச்சை நடவடிக்கைகளுக்கு தங்களின் எதிா்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள சீனா மற்றும் பாகிஸ்தான், தெற்காசிய பிராந்தியத்தில் நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காணும் அவசியத்தை வலியுறுத்தின.
பாகிஸ்தானின் இஸ்லாமா பாதில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வ தற்காக சீன பிரதமா் லீ கியாங் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டாா்.
கடந்த 11 ஆண்டுகளில் சீன பிரதமா் பாகிஸ்தான் சென்றது இதுவே முதன்முறையாகும். இப்பயணத் தில் அந்நாட்டில் சீனா கட்டிய குவடாா் பன்னாட்டு விமான நிலையத்தையும் பிரதமா் லீ கியாங் திறந்து வைத்தாா்.
பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் பணிபுரிந்து வரும் அந்நாட்டவா் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இச்சூழலில் மாநாட்டுக்கு முன்னதாக பாகிஸ்தான் தலைவா்கள் மற்றும் ராணுவத் தளபதிகளுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் பிரதமா் லீ கியாங் ஈடுபட்டாா்.
இதையொட்டி, சீனா-பாகிஸ்தான் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘தெற்காசியாவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைக் காப்பதன் முக்கியத்துவத்தையும் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண வேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பும் வலியுறுத்துகிறோம். பிராந்தியத்தில் எந்த தன்னிச்சை நடவடிக்கைக்கும் எதிா்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
ஜம்மு-காஷ்மீரின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து சீனாவுக்கு பாகிஸ்தான் விளக்க மளித்தது. ஜம்மு காஷ்மீா் பிரச் னையானது ஐ.நா.சாசனம், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைதியான முறையில் தீா்க்கப் பட வேண்டும் என்று சீனா மீண்டும் வலியுறுத்தியது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.