சென்னை,அக்.17- வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட் டார். அப்போது, சென்னை மக்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஆய்வு
சென்னையில் அக்.14 மற்றும் 15 தேதிகளில் பெய்த தொடர் மழையால் பல்வேறு தெருக்கள்.சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாநகராட்சி அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் தேங்கிய தண்ணீர் வெளியேற் றப்பட்டது. வடசென்னையில் ஒவ்வொரு பகுதியாக சென்று இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.10.2024 அன்று கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார்
கிண்டியில் புதிய நீர்நிலைகள்
இந்நிலையில் நேற்று (16.10.2024) கிண்டி, வேளச்சேரி,பள்ளிக்க ரணை ஆகிய பகுதிகளில் நடை பெற்று வரும் நீர்நிலைகள் அமைக்கும் பணி, ஓடையை தூர்வாரும் பணி,ஏரியை சீரமைக்கும் பணி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
கிண்டி ரேஸ்கிளப்இடத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்திய நிலையில் அங்கு புதிதாக 4 நீர் நிலைகளை பணியை அமைக்கும் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதுதவிர ஏற்கெனவே அங்குள்ள 3 குளங்களை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த பணிகளை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, மழை காலங்களில் வெள்ள நீரை புதிதாக அமைக்கப்படும் நீர்நிலைகளுக்கு கொண்டுவருவது குறித்து கேட்டார்.
விரைந்து முடிக்க உத்தரவு
அதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், ‘இந்த புதிய நீர்நிலைகள் மூலம் கிண்டி ரேஸ்கிளப் மழைநீர் மடுவங்கரை, 5 பர்லாங்சாலை, வண்டிகாரன் தெரு, ரேஸ் கிளப் உட்புறச் சாலை, வேளச்சேரி பிரதான சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்வது தடுக்கப்பட்டு இங்கேயே சேமிக்கப்படும். என்றார். இதைத்தொடர்ந்து, இந்த பணி களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஏரியை பலப்படுத்தும் பணி
அதேபோன்று நீர்வளத் துறை மூலம் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை பலப்படுத்தும் பணி, கீழ்கட்டளை ஏரியின் உபரிநீர் கால்வாய் பாலத்தில் தண்ணீர் சீராக செல்வதை தடுக்கும் தாவரங்கள், குப்பைகளை பொக்லைன் மூலம் அகற்றும் பணி, தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மணல் மேட்டினை அகற்றும் பணிகளையும் நேரில் பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், உடனடியாக முடிக்க உத்தரவிட்டார்
நிரந்தர தீர்வு
ஆய்வுக்கு பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கா மல் இருப்பதற்காக ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் 3 மாதமாக திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். பெரும்பாலான பணிகள் முடிவ டைந்த நிலையில் 25 முதல் 30 சத வீதம் பணிகள் பாக்கி உள்ளது. இந்தப் பணியையும் விரைந்து முடித்து விடுவோம். இதன்பின்பு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தரமான தீர்வு நிச்சயமாக கிடைக்கும்’’. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், வருவாய்த்துறை முதன்மை செயலா அமுதா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த் திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் உடன் சென்றனர்.
களப்பணியை தொடர்ந்திடுவோம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘கனமழை குறித்த எச்சரிக்கை (அலெர்ட்) பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர் கொண்டோம்.பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்காமல் சரி செய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றி களப்பணியை தொடர்ந்திடுவோம்’ என கூறி உள்ளார்.
மழைநீர் தேங்காமல் இருக்க
ஒரே இரவில் துரித நடவடிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் நேரில் பாராட்டு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், 2ஆவது நாளாக நேற்று (16.10.2024) சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ், வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளுக்கு நேரிடையாக சென்று மழை வெள்ள நிவாரணப் பணி களை ஆய்வு செய்தார். அப்போது, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி பகுதியில் பொதுமக்கள் ஒன்று திரண்டு, தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட் டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொது மக்கள் கூறியதாவது:-
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதி நள்ளிரவில், பள்ளிக்கரணை பகுதியில் ஆய்வு செய்து, மழை நீர் தேங்காமல் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த பணி நடைபெறும்போது மீண்டும் நேரடியாக பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். அதன் விளைவாக இந்த பகுதியில் நேற்று பெய்த கனமழையின் போதும், 2008ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் மழை நீர் எங்கும் தேங்காமல் சென்றது. துரிதமான நடவடிக்கையை ஒரே இரவில் மேற்கொண்டதால் இந்த பகுதி மக்களின் சார்பாக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
-இவ்வாறு அவர்கள் கூறினர்.