திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளரணி மேனாள் செயலாளரும், திருவாரூர் மாவட்ட கழக காப்பாளருமாகிய மானமிகு பி.இரத்தினசாமி அவர்கள் (வயது72) நேற்று (15.10.2024) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
நீண்ட கால பெரியார் பெருந்தொண்டர். கழகக் குறிப்புகளை சேகரித்து வைப்பவர். கழகப் போராட்டங்களில் ஈடுபடுபட்டவர். அவர் மறைவால் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரின் குடும்பத் தாருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று (16.10.2024) கங்களாஞ்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மதியம் 1 மணி அளவில் இறுதி ஊர்வலம் புறப்படும்.
மாவட்ட கழகத்தின் சார்பில் இன்று (16.10.2024) இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
அவருக்கு நமது வீர வணக்கம்.
சென்னை
16.10.2024
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்