திருவனந்தபுரம், அக்.12 கேரள கோவிலில், எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் பூசாரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். கோவில் சமையலறைக்கு தீபத் தட்டுடன் சென்றபோது இந்த விபரீதம் ஏற்பட்டது.
கேரள தலைநகர் திருவனந்த புரம் அருகே கிளிமானுாரில் புதியக்காவு என்ற பெயரில் கோவில் உள்ளது.
கோவில் பூசாரி ஜெயக்குமரன் நம்பூதிரி (வயது 49), சிலைக்கு தீபாராதனைக் காட்டிவிட்டு தீபத்துடன் அங்குள்ள சமைய லறைக்குப் பிரசாதம் தயாரிக்க சென்றார்.
அப்போது, சமையலறையில் இருந்த எரிவாயு ஏற்கெனவே கசிந்திருந்ததால், திடீரென அவர் உடல் முழுதும் தீப்பற்றியது. இதில், பூசாரி ஜெயக்குமரன் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயக்குமரன் பரிதாப மாக உயிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்