சென்னை, அக்.11- தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் செயல்படுவதா என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
ம.தி.மு.க.வுக்காக உயிர் நீத்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப் பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராஜபுரம் பாலன் ஆகியோரின் உருவப் படங்களுக்கு, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று (10.10.2024) மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சூளூரை யும் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து, டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா மறை வுக்கு ஒரு நிமிடம் அமைதியாக மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போது துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டசெயலாளர் கள் ஜீவன், சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
காஷ்மீர் சிறப்புத் தகுதி
இதைத்தொடர்ந்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறிய தாவது:-
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகை யில் செயல்பட்டு வருகிறார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் கட்டிக்காத்த திராவிட இயக்க சூழலை அவர்களால் ஒருநாளும் முறியடிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றி காஷ்மீரின் தனித்துவத்தை பா.ஜனதா பறித்தது. ஆனால், நடைபெற்று முடிந்த தேர்தலில் காஷ்மீரை இந்தியா கூட்டணி கைப்பற்றி உள்ளது. காஷ்மீரின் தனித்து வத்தை பறித்த நாடாளுமன்ற தீர்மானத்தை காஷ்மீர் நிராகரித்துள்ளது.
எனவே, காஷ்மீர் சட்ட மன்றத்தில் அதற்கு எதிராக துணிந்து தீர்மானம் கொண்டு வர வேண்டும். இதனால், புரட்சியும், பிரச்சினையும் வரும் என்றால், அதை அறவழியில், ஜனநாயக வழியில் எதிர்த்து போராடுவோம். காஷ்மீரை தனித்துவம் வாய்ந்த மாநிலமாக ‘இந்தியா’ கூட்டணி மாற்றிக்காட்டும். காஷ்மீர் மீண்டும் ஜனநாயக பாதைக்கு திரும்பி உள்ளது. இதிலில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பாடம் கற் றுக் கொள்ள வேண்டும்.
திடீர் திருப்பம்
அரியானாவில் இந்தியா கூட்டணிக்கும், பா.ஜனதாவுக்கும் சிறிய அளவே ஓட்டு வித்தியாசம் இருந்தது. இதற்கு, சில இடங்களில் ஒற்றுமை இல்லாமல் போட்டிபோட்டதே காரணம். ‘நாட்டின் தலைநகர் டில்லி ஆக இருக்காது, வாரா ணாசியாகதான் இருக்கும்’ என்று நாக்பூரில் நடந்த இந்துத்துவா மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்துள் ளார்கள். இது, இந்திய ஒரு மைப்பாட்டை உடைக் கவே வழி வகுக்கும். ‘தனி நாடு,திராவிடநாடு என்பதை நான் கேட்பதை விட்டுவிட் டாலும், கேட்டதற்கான கார ணம் அப்படியே உயிரோடு இருக்கிறது’ என்று அண்ணா முதலமைச்சராக ஆன சில நாட்களில் பிரகடனம் செய்தார். இதுபோன்ற நிலைமை எதிர்காலத்தில் நிச்சயம் மலரும்.
இந்தியாவை பிரிக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் அனைத்து மதங்களை யும்,சமமாக மதித்து, மதச்சார் பின்மை கோட்பாட்டை நிலைநாட்ட உறுதி எடுத்துக் கொண்டுள்ளோம். வரும் நாட்கள் பரபரப்பாகவும், திடீர் திருப்பங்களாகவும் அமையும். ஆனால், அனைவ ரும் ஒன்றாக இருக்க வேண் டும்என்று இந்தியா கூட்டணி கட்சிகள் உறுதி எடுத்துள் ளன. அதற்கு வழிகாட்டும் இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.
-இவ்வாறு அவர் கூறினார்.