சென்னை, அக்.10- அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி உயா்த்தப்பட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று முந்தைய நாள் (8.10.2024) நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:
சொத்துவரி அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் உயா்த்தப்பட்டது. அப்போது, 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயா்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் உயா்த்தப்பட்ட வரியை வசூலித்தனா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால் சொத்து வரி உயா்வை திரும்பப் பெறுவதாக அறிவித்தனா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு, சொத்து வரி உயா்வை தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைத்தோம் எனக் கூறி மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தனா்.
அதிமுகவே காரணம்: ஒன்றிய அரசு நிதிக் குழு வழங்கிய அறிவுரைப்படியே ஒவ்வோர் ஆண்டும் சொத்து வரி உயா்த்தப்படுவதாக அதிமுக கூறியது. இப்போது அதனைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துகின்றனா். இதேபோன்று மின் கட்டண உயா்வுக்கும் அதிமுகவினா் பதற்றம் அடைகின்றனா். ஆனால், ‘உதய்’ மின் திட்டத்தில் கையொப்பமிட்டு மின் கட்டண உயா்வுக்கு வழிவகுத்ததே அதிமுக ஆட்சியில்தான். அவா்கள் தொடங்கி வைத்து நடைமுறையில் இருந்து வருவதை, புதிதாக நடைமுறைக்கு வந்தது போன்று எதிர்க்கிறார்கள்.
அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தன்னை தக்க வைத்துக் கொள்ள இதுபோன்ற போராட் டங்களை எடப்பாடி கே.பழனிசாமி நடத்துகிறார். எனவே, அதுபோன்ற போராட்டங்கள் மூலமாக மக்களை திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம்.
சாகச நிகழ்ச்சியை அறிவித்து அதனை நடத்தியது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விமானப் படை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் மீது குற்றம் சுமத்தாமல் மாநில அரசு மீது எடப்பாடி பழனிசாமி பழி கூறியுள்ளார். சாகச நிகழ்வின் போது வெயிலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனா். கூட்ட நெரிசலால் இறந்தது போன்று திரித்துக் கூற அதிமுகவினா் முயல்கின்றனா் என்று அமைச்சா் சா.சி. சிவசங்கா் கூறினார்.
தமிழ்நாடு அரசின்
சாதனைக்கு மேல் சாதனை
அரியலூரில் காலணி
உற்பத்தி ஆலை உருவாகிறது
சென்னை, அக்.10 வியட்நாமைச் சேர்ந்த பிரிடிரெண்ட் நிறுவனம் அரியலூரில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில், காலணி உற்பத்தி ஆலை அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காலணி உற்பத்தி ஆலை மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்ெகனவே பீனிக்ஸ் கோதாரி நிறுவனம் காலணி தயாரிப்பு ஆலை அமைத்துள்ள நிலையில், இப்பகுதி காலணி உற்பத்திக்கென தனித்துவ முனையமாக மாறியுள்ளது
இந்தியாவிலேயே 2ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலசை்சர் மு.க.ஸ்டாலின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் தொழில் முதலீடுகளையும் ஈர்த்திட முயற்சிகள் எடுத்து வருகிறது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பிரீ ட்ரெட்ண்ட் நிறுவனம் காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் பிரீ ட்ரெட்ண்ட் நிறுவனம் ரூ.1000 கோடி மதிப்பில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. இந்த ஆலை அமைவதன் மூலம் 15,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த முதலீட்டு பட்டியலில் ஃபாக்ஸ்கான், கெய்னஸ், பிரிடிரெண்ட், டாடா மோட்டார்ஸ், ராக்வெல், நோக்கியா, லீப்கிரீன், ஆகிய நிறுவனங்கள் தங்கள் தொழிசாலையை தமிழ்நாட்டில் அமைத்து செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அரியலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், செங்கல்பட்டு, கோவை, சென்னை, திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளது.