உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் 3-10-2024 அன்று காலை 11:30 மணிக்கு தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம் மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா.குணசேகரன், தஞ்சை மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங், மாநில ப. க அமைப்பாளர் கோபு.பழனிவேல், கழக மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச.அழகிரி, தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.இராமலிங்கம், மாநகர துணைத் தலைவர் அ.டேவிட், மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன், பகுத்தறிவாளர் கழக மாநகர செயலாளர் நாகநாதன், மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வன் ஆகியோர் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து இயக்க நூல்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து

Leave a Comment