அன்று திட்டமிட்டு கல்லுப் பிள்ளையார் மாட்டுப்பால் குடித்தார் என்று, ஸநாதன ஆர்.எஸ்.எஸ். கும்மாளமிட்டு,கூத்தாடியவர்கள், திருப்பதி லட்டுகள் பல்லாயிரம், நெய்வேத்தியம்செய்யும் போது, தின்று மகிழ்ந்து குதியாட்டம் போட்ட வெங்கடாச்சலபதியைப் பற்றி மவுனம் சாதிக்கும்ஆர்.எஸ்.எஸ், பன்றி,மாட்டுகொழுப்பு, கலந்தலட்டு சாப்பிட்டார் வெங்கடாச்சலபதி, என்று கூறாமல் மவுனம் ஏன்?
ஆங்கிலேயர் காலத்து குற்ற வியல் சட்டங்களை, ஆங்கி லத்தில் இருப்பதை மாற்றி, சமஸ் கிருத்தத்தில் மாற்றியுள்ளோம், என கொக்கரிக்கும் ஆர்.எஸ்.எஸ். பாம்பன் புதிய செங்குத்து தூக்குபாலத்தை ஏன்? ஸநாதன ஒன்றிய மோடி, அனேக உபகரணங்களை ஸ்பெயின் நாட்டில் உள்ளதொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்க, வேண்டும்?பாலம் மூடும்போது, சரியாக பொருந்துவதற்கு அமெரிக் காவில் இருந்து இறக்குமதி செய்த, அமெரிக்க ஹைடன் ரப்பர் பொருத்தப் பட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டில் பெட்லாக் நகரில் முன்பே, செங்குத்து பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாம்பனில் தற்போது 2ஆவது பாலம். ஒரே நாடு என்பவர்களுக்கு அய் ரோப்பியர்களின் தொழில்நுட்பம் என்பது தெரியாதா? பாலம் திறக்கும் போது மந்திரம் ஓத, தண்ணீர் தெளிக்க, லட்டுமீது தண்ணீர் தெளித்து தீட்டுக் கழித்த அவாள் வந்திருவா!
ஆர்.எஸ்.எஸ். ஸநாதனமே, எத்தனை காலம் ஏமாற்றுவாய் மக் களை! நீ வீழ்த்தப்பட்ட பிறகும் திருந்த வில்லை. காலம் பதில் சொல்லும்.
– ச.தியாகு, மதுரை.625017