குடியேற்றம், அக்.3- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் கலந்துரை யாடல் கூட்டம் 22.09.2024அன்று காலை 10-மணியளவில் குடியேற்றம் புவனேசு வரிப்பேட்டை பெரியார் அரங்கில் நடைப் பெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர. அன்பரசன் இக்கூட்டத்திற்கு தலைமை யேற்றார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மா.அழகிரிதாசன் அனை வரையும் வரவேற்றார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.
மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் வழிகாட்டி உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் ஆற்றிய சிறப்புரையில், “இந்திய பகுத்தறிவாளர் கழக சங்கங்களின் கூட்டமைப்பு 13ஆவது மாநாடு வருகிற டிசம்பர் 28,29 ஆகிய இரு நாட்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு திருச்சி மாநகரில் நடைபெற உள்ளதால், இந்த மாநாட்டில் அகில இந்திய அளவிலும் அயல்நாட்டு அளவிலும் இருந்து எண்ணற்ற பகுத்தறிவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். ஆகவே, வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் திராவிடர் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் திராவிட இயக்க உணர்வாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாநாட்டை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சிறப்பாக பணியாற்றி வருகிறது. மருத்துவ முகாம்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, சதுரங்கப் பயிற்சி வகுப்புகள், மகளிர் நலன் போற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடத்தி வருவதை பாராட்டி மகிழ்கின்றேன்.மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று போதைப் பொருள் விழிப்புணர்வு மற்றும் மனநலம் சார்ந்த கருத்தரங்கங்கள் நடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற பணிகளை தொடர்ந்து செய்து மாணவர்கள் இடையே மூடநம்பிக்கைகளை அகற்றி தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகளை வளர்த்து அறிவார்ந்த மாணவச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.
கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவில், திருச்சி மாநகரில் டிசம்பர் 28, 29 ஆகிய நாட்களில் நடைபெறும் 13ஆவது மாநாட்டில் வேலூர் மாவட்டத்தில் இருந்து பெருமளவில் கலந்து கொள்வது என்றும்,
இந்த மாநாட்டிற்காக வேலூர் மாவட்டத் திற்கு நிர்ணயம் செய்த நிதியினை மாநில பகுத்தறிவாளர் கழக தலைவரிடம் ஒப்ப டைப்பது என்றும்,
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் பொறுப்பிற்கு முனைவர் வே.வினாயகமூர்த்தியையும், மாவட்ட அமைப்பாளராக மா.அழகிரி தாச னையும், குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் பொறுப்பிற்கு ப.ஜீவானந்தத்தையும் புதிதாக நியமிப்பது என்றும், வேலூர் மாவட்ட அளவில் உள்ள பள்ளி ஆசிரியர்களை ஒன்று திரட்டி பகுத்தறிவு பயிற்சிப் பட்டறை நடத்தி அறிவார்ந்த மாணவர் சமு தாயத்தை உருவாக்கிட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மாநாட்டிற்கு நன்கொடை
வழங்கிய தோழர்கள்
வி.சடகோபன் Rs.5,000, ப.ஜீவானந்தம் 5,000, பி.தனபால் 2,500, வி.மோகன் 3,000, சி.சாந்த குமார் 2,000 என நன்கொடை வழங்கினர்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் வேலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட காப்பாளர் வி. சடகோபன், நகர திராவிடர் கழக தலைவர் சி.சாந்தகுமார், நகர திராவிடர் கழக அமைப்பாளர் வி.மோகன், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் ஆசிரியர் பி. தனபால், பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த ஓவியர் க.பரமசிவம் மற்றும் ப. ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் க.சையத் அலீம் நன்றி கூறினார்.