பீகாரில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வீடுகள் எரிப்பு!
மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு!
புதுடில்லி, செப். 21- பீகாரில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. பா.ஜ.க. கூட்டணி அரசின் காட்டாட்சிக்கு மற்றுமொரு சான்று என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக வன்முறை ஏற்பட் டுள்ளது.
இதில், தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த நிகழ்விற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டசமூக வலைதளப்பதிவில்,பீகாரில் நடந்த அட்டூழி யங்கள், நிதிஷ்குமார்-பா.ஜ.க. கூட்டணி அரசின் காட்டுராஜ்ஜியத்திற்கு மற்றொரு சான்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 100 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது, துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டது, என ஒரே இரவில் ஏழை மக்களின் உடைமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. ஆட்சியில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீதான அலட்சியம், குற்றங்களை தடுக்க தவறியது உச்சகட்டத்தில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வழக்கம்போல் பிரதமர் மோடி மவுன மாகவும், அதிகார பேராசையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அக்கறையின்றியும் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.