புதுடில்லி, செப்.20 மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருநாடக மாநில காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது பெங்களூரில் உள்ள ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது சீக்கியா்கள் குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தை விமா்சித்து ஒன்றிய அமைச்சா் ரவ்நீத்சிங் பிட்டு கூறுகையில், ‘வெடிகுண்டுகளைத் தயாரிப்போர் ராகுல் காந்தியை ஆதரிக்கிறார்களா என்ன? நாட்டின் முதல் பயங்கரவாதி ராகுல் காந்திதான்’ என்று கடுமையாக சாடியிருந்தார். இதனடிப்படையில் ஒன்றிய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 353(2), 192, 196 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.