கலவரம் விளைவிக்கக் காரணம் கண்டுபிடிப்பதா? பசுவின் வாலை கோவிலுக்குள் முஸ்லீம்கள் வீசியதாகக் கூறி கலவரம்

viduthalai
3 Min Read

ஜெய்ப்பூர், செப்.18- ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் உள்ள பவானி நகரில் கடந்த ஆகஸ்ட் 25 அன்று அங்குள்ள அனுமன் கோவில் வளாகத்தில் பசுவினுடைய வால் கிடந்துள்ளது.

அதனைக் கண்ட காவிக் கும்பல் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டதோடு அருகிலுள்ள இசுலாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் கலவரத்தில் ஈடுபடும் நோக்கத்தோடு பேரணியாகச் சென்றனர். இக்கூட்டத்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

“இந்தச் நிகழ்வில் ஈடுபட்டவர் களை மாலை 5 மணிக்குள் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்படும்” என்று கோவிலுக்கு முன்பாக முழக்கங்களை எழுப்பிய வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது காவிக் கும்பல்.

இந்த ஆர்ப்பாட்டம் பி.ஜே.பி எம்.பி தாமோதர அகர்வால் மற்றும் மஹாமண்டலேஷ்வர் ஹன்சாராம் ஆகியோரின் தலைமையில் நடை பெற்றுள்ளது. காவிக் கும்பல் திட்டமிட்டே மதக்கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் புனிதமாகக் கருதும் பசுவின் வாலை கோவிலின் வளாகத்திற்குள் போட்டுவிட்டு, அதனை இசுலாமியர்கள் செய்த தாக மக்களிடம் திரித்துக் கூறி யுள்ளது. அன்று இரவே, மறுநாள் (ஆகஸ்ட் 26) காலை 11 மணி அளவில் பரசுராம் வட்டத்தில் அனைவரும் கூடுமாறு வாட்ஸ்அப் குழுவில் செய்தி ஒன்றைக் காவிக் கும்பல் வெளியிட்டது. அடுத்த நாளே அவர்கள் நினைத்தபடி ஏரா ளமான மக்கள் தடிகளுடனும், ஆயுதங்களுடனும் ஒன்று கூடி முழக்கங்களை எழுப்பியதோடு அப்பகுதியில் உள்ள சிறுபான்மை மக்களின் கடைகள் மற்றும் கடை களில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்பாக கடந்த ஜூன் 15 பக்ரீத் விழா அன்று தெலங் கானா மாநிலத்தில் உள்ள மேடக் நகரில் பசுவதையைத் தடை செய் யக்கோரி ஆர்.எஸ்.எஸ்.,பி.ஜே.பி. கும்பல் பேரணி நடத்தியது. இந்தப் பேரணியைப் பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல் முஸ்லீம் மக்களின் கடைகள் மீது திட்டமிட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதேபோல் ஒடிசா மாநிலத்தில் உள்ள கடலோர நகரமான பால சோரில் முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பக்ரீத் விழாவுக்கு முந்தைய நாள் கலவரத்தைத் திட்ட மிட்டு நடத்தியுள்ளது காவிக் கும்பல். இத்தாக்குதல் ஒடிசாவில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த நான்கு நாட்களில் நடந்தேறியுள்ளது.

கடந்த மாதம் வங்கதேசத்தில் அந்நாட்டு அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள், மக்கள் என அனைவரும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த போது காவிக் கும்பலாலும் ஆளும் வர்க்க ஊட கங்களாலும் வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் இந்துக் கோவில் கள் மீது இசுலாமியர்கள் தாக்குதல் நடத்துவதாகப் பொய்யான செய்தி கள் பரப்பப்பட்டது.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பல் டில்லியில் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்குச் சென்று இசுலாமியர்களின் வீடுகளை அடித்து நொறுக்கியதோடு “இது உங்கள் நாடு இல்லை.
நீங்கள் அனைவரும் உங்கள் நாடான வங்கதேசத்திற்குச் செல் லுங்கள்” என்று மிரட்டியுள்ளது. இசுலாமியர்களுக்கு எதிரான இதுபோன்ற தாக்குதல்கள் பாசிஸ்ட் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு அதிகரித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் 29 கோடி இசுலாமியர்கள் இந்தியாவில் வாழ்வது சவாலானதாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள மோடியின் ஆட்சியில் இசுலாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் முன்பைவிட தீவிரமடையவே செய்யும்.

எனவே, இதுபோன்ற தொடர்ச்சி யாக நடைபெறும் மதக் கலவரங்களைத் தடுக்க வேண்டுமெனில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலைத் தடை செய்ய வேண்டும். அதற்கு ஒருங்கிணைந்த மக்கள் போராட்டங்களைக் கட்டி யமைக்க வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *