சென்னை, செப்.13 தொழிற் பயிற்சி நிலை யங்களில் (அய்டிஅய்) மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் நேற்று (12.9.2024) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவா்கள் சோ்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவா்களின் நலன் கருதி செப்டம்பா் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவை தொடா்பாக, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவை குறித்து விளக்கம் பெற 94990 55689 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.