கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் ஒன்றிய அமைச்சர் பாராட்டு

viduthalai
2 Min Read

சென்னை, செப்.11 கல்வித் தரத்தில் நாட்டி லேயே தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக, ஒன்றிய கல்வி அமைச்சர் பாராட் டியுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசுப் பள்ளிகளின் கல்வித் திறனை மேம்படுத்த ரூ.1,086 கோடியில் 614 பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.551.41 கோடியில் 28,794 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இதுதவிர, ரூ.436.74 கோடியில் உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் தற் போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் பயன் பெறுகின்றனர். காட்டுப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் பள்ளிக ளுக்குச் சென்று வரும் குழந் தைகளின் சிரமங்களை போக்க, போக்குவரத்து பாது காவலர்களுடன் வசதிகள்

செய்யப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களில் மாற்றுத்திறன் மாணவர்களை அடையாளம் காண ‘நலம் நாடி’ என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘நான் முதல்வன்’ திட் டத்தின் கீழ், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயி லும் மாணவர்களுக்கு உயர் கல்வி தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு, 10 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள் ளனர். தமிழ் நாடு முதலமைச்சர் திறனாய் வுத் தேர்வு மூலம், 11-ஆம் வகுப்பு பயிலும் 1,000 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1000 வீதம் இளநிலை பட்டப் படிப்பு வரை வழங்கப் படுகிறது
கிராமப்புற மாணவ, மாணவியர் உரிய நேரத் தில் பள்ளி வந்து செல்ல வசதி யாக, 3,44,144 பேருக்கு ரூ.165.84 கோடியில் இலவச மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்க ளின் கீழ், 6 லட்சத்துக்கும் மேற்பட் மாணவ, மாணவியர் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர்.

டில்லியில் கடந்த ஆக.13-ஆம் தேதி ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட தேசிய கல்வி நிறு வனங்களுக்கான தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள செய்திகள் தமிழ்நாட் டின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளன.

அதாவது, தேசிய அளவில் தரவரிசைப்படுத்தப்பட்ட 926 கல்லூரிகளில் தமிழ்நாடு கல்லூரிகள் மட்டும் 165. அதற்கு அடுத்த நிலைகளில் டில்லியில் 88, மகாராஷ்டிரா – 80, கருநாடகா – 78, உத்தரப் பிரதேசம் – 71, அசாம் – 15, மத்தியப்பிரதேசம், சண்டிகர், ஜார்க்கண்ட்,ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா 12 கல்லூரிகள் என தரவரிசைப ்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், உயர்கல்வியில் தமிழ் நாடு தலைசிறந்து விளங்குவது தெளிவாகிறது.

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வ கங்கள், காலை உணவு என பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரு வதால், அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து, கல்வித்தரத்தில் நாட்டின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *