கொழும்பு, செப்.3- இலங்கை அதிபா் தோ்தல் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கார ணமாக, அந்த நாட்டின் முக்கிய தமிழ் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டணியில் (டிஎன்ஏ) பிளவு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் 21.9.2024 அன்று நடை பெறவிருக்கிறது.
இந்தத் தோ்தலில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிர்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச உள்பட 39 போ் போட்டியிடுகின்றனா். இது, இலங்கை அதிபா் தோ்தலில் இதுவரை இல்லாத அதிகபட்ச வேட்பாளா் எண்ணிக்கையாகும்.
இந்தத் தோ்தலில் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கிய செல்வம் அரியேந்திரனை தங்கள் பொது வேட்பாளராக தமிழ் கட்சிகள் களமிறக்கியுள்ளன.
அதிபா் தோ்தலில் பொது வேட்பாளரைக் களமிறக்க தமிழ் கட்சிகளான டெலோ, ப்ளாட், டிபிஏ, இபிஆா்எல்எஃப் உள்ளிட்ட கட்சிகள் கடந்த ஜூலை மாதம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவா் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எனினும், தமிழ் தேசியக் கூட்டணி இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.
அதிபா் தோ்தலில் தமிழா் சாா்பில் வேட்பாளரை நிறுத்துவது எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று அந்தக் கூட்டணியின் மூத்த தலைவா்கள் கருதுகின்றனா்.
தமிழா்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதி காரப் பகிா்வு அளிப்பதாக உறுதி யளிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க டிஎன்ஏ முடிவு செய் திருந்தது.
இதுதொடா்பாக 3 முக்கிய வேட்பாளா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்திவருவதாக கூட்டணியின் செய்தித் தொடா் பாளா் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தாா். இந்த விவகாரத்தில் கூட்டணி இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், தமிழ் கட்சிகள் நிறுத்தியுள்ள பொது வேட்பாளரான பாக்கியசெல்வம் அரியேந்திரனுக்கு ஆதரவளிக்க டிஎன்ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவா் சிறீதரன் அறிவித்துள்ளாா். இதனால், அந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றி பெற தமிழ் தேசியக் கூட்டணியின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டின் அதிபா் தோ்தலில் மேனாள் அதிபா் மகிந்த ராஜபட்ச தோல்வி யடைந்ததற்கு, அவரை எதிா்த்துப் போட்டியிட்ட மைத்ரிபால சிறி சேனாவை டிஎன்ஏ ஆதரித்ததே காரணம் என்று கூறப்படுகிறது.
அதிபா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் ஒருவா் மரணமடைந்ததைத் தொடா்ந்து, இந்தத் தோ்தலில் போட்டி யிடுவோரின் எண்ணிக்கை 38-ஆகக் குறைந்துள்ளது.
இது குறித்து ஊடகங்கள் தெரிவித்ததாவது:
அதிபா் தோ்தலில் போட்டி யிடுவதாக இருந்த இத்ருஸ் முகமது இலியாஸ் (79) மார டைப்பால் 29.8.2024 அன்று நள்ளிரவு மரணமடைந்தாா். அதையடுத்து, அதிபா் தோ்தல் வேட்பாளா்களின் எண்ணிக்கை 38-ஆகக் குறைந்துள்ளது.
இருந்தாலும், வாக்குச் சீட்டி லிருந்து அவரின் பெயரை நீக்கப்போவதில்லை என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா். இதற்கு முன்னா் கடந்த 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலுக்கு முன்னதாக, தற்கொலை குண்டு வெடிப்பில் முக்கிய எதிா்க்கட்சி வேட்பாளா் ஒருவா் உயிரிழந்தாா்.
அதை யடுத்து, வாக்குச் சீட்டில் அவா் பெயருக்கு பதிலாக அவா் மனைவியின் பெயா் இடம் பெறச் செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.