புலனாய்வு
முக்கிய குற்ற வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்வது குறித்து சென்னை காவல் ஆணையரை, தேசிய புலனாய்வு முகமையின் (என்அய்ஏ) தென் மண்டல இயக்குநர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
உத்தரவு
குரூப் 1 தேர்வு விடைத்தாளை மாற்றி மோசடி செய்த வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழிப்புணர்வு…
சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வும், அதிக வல்லுநர்களும் தேவை என்று தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மய்யத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தெரிவித்துள்ளார்.
கலந்தாய்வு
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 4ஆம் தேதி தொடங்குகிறது. சிறப்பு பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு நேரடியாகவும், பொதுப் பிரிவினருக்கு ஆன்லைன் வாயிலாகவும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
உயர்கல்விக்கு…
பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உயர்க்கல்விக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘உயர்வுக்குப்படி’ சிறப்பு முகாம் அனைத்து மாவட்டங்களிலும் செப். 2ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
அதிகரிப்பு…
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4,284 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 5,349 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கன அடியும், கால்வாய் பாசனத்துக்கு 700 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.