கைத்தறித் துறையை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட்டுவிட்டது! சோனியா காந்தி குற்றச்சாட்டு!

1 Min Read

புதுடில்லி, ஆக. 21- கைத்தறித் துறையை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட்டுவிட்டதாக, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :–
‘ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹர் கர் திரங்கா எனும் வீடு தோறும் தேசியக் கொடியேற்றுவது என்ற நிகழ்வில், பாலியஸ்டர் மூலம்நெய்யப்பட்ட தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் மூலம், சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாலியஸ்டர் நூல் மூலம் உருவாக்கப்பட்ட தேசியக் கொடிகள் அதிகரித்திருப்பது கைத்தறித்துறை மீதான தாக்குதல் ஆகும்.

காதி என்பது இந்திய வரலாற்றுடன் பின்னி பிணைந்த ஒன்று. கைத்தறி மூலம் உருவாக்கப்பட்ட தேசியக் கொடிகள் தான், சுதந்திர போராட்டத் தில் முக்கிய பங்காற்றின. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில், காதி தனிமனிதனின் இறையாண்மை மற்றும் தன்னிறைவைக் கண்டறியும் கருவியாக இருந்தது.

கைத்தறி தொழிலாளர்களுக்கு ஜிஎஸ்டி தொடர்ந்து சுமையாக உள்ளது. இறுதி தயாரிப்பு மற்றும் மூலப்பொருட்கள் மீது வரி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. குறிப்பாக மின்சாரம் மற்றும் பருத்தி நார் ஆகியவற்றின் விலைகள், கைத்தறி தொழிலாளர்களை பிழியும் வகையில் உள்ளது. நமது தேசியக் கொடியை தாங்கி நிற்கும் ஒரே துணியாக காதியை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும்.’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *