‘தொலைநோக்குச் சிந்தனையாளர் கலைஞர்!’ குறும்பட – சுருள்படப் போட்டி! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

viduthalai
2 Min Read

சென்னை, ஆக. 21- முத் தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் “தொலைநோக்குச் சிந்தனையாளர் -கலைஞர்” எனும் குழுவின் சார்பில் குறும்படப் போட்டி (Short film Competition) மற்றும் சுருள்பட போட்டி (Reels Competition)க்கான கால அவகாசம் நீட்டிக்கப் படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:–

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக தொலைநோக்குச் சிந்தனையாளர்- கலைஞர் எனும் குழுவின் சார்பில் குறும்படப் போட்டி (Short film Competition) மற்றும் சுருள்படப் போட்டி (Reels Competition) நடத்துவது தொடர்பான செய்தி வெளியீடு 31.10.2023 அன்று வெளியிடப்பட்டது.
அச்செய்தி வெளியீட்டில் இப்போட்டிகளுக்கான விண்ணப் பங்களுடன் கூடிய குறும்படங்கள் மற்றும் சுருள்படங்களை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இப்போட் டிகளுக்கான கால அவகாசம் 15.01.2024 வரை நீட்டிக்கப்பட்டது.

அதனடிப்படையில் குறும் படங்கள் மற்றும் சுருள் படங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. இதனை பார்வையிட்ட குழு, மேற்கூறிய தலைப்பில் குறும் படங்கள் மற்றும் சுருள்படங்கள், ஆகியவற்றை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது.

இப்போட்டிகளுக்காக ஏற்கெனவே குறும்படங்கள் மற்றும் சுருள் படங்களை அனுப்பிய போட்டியாளர்கள் அப்படங்களை மீண்டும் அனுப்ப தேவையில்லை. புதியதாக கலந்து கொள்ள விருப்பமுள்ள வர்கள் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொலைநோக்குச்சிந்தனையாளர் -கலைஞர் (உதாரணமாக சமூக நீதி, கல்வியில் புரட்சி, சுகாதார துறையில் புரட்சி, தொழிற்துறை மேம்பாடு, மாநில அரசின் உரிமை, பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற / நகர்ப்புற வளர்ச்சி) என்ற தலைப்பில் குறும்படங்களை (Short film) (அதிகபட்சம் 10 நிமிட ங்கள்) உருவாக்கி அதனை விண்ணப்பங்களுடன் 31.08.2024 தேதிக்குள் ([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதேபோல் சுருள்பட போட்டியில் (Reels) கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்குச் சிந்தனையாளர்-கலைஞர் எனும் தலைப்பில் புதிய சுருள்படங்களை 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை இருக்கும் வகையில் உருவாக்கி விண்ணப்பங்களு டன் 31.08.2024 தேதிக்குள் ([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குறும்பட போட்டி (Short film Competition) மற்றும் சுருள்படப் போட்டி (Reels Competition)களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை https://dipr.tn.gov.in (செய்தி வெளியீடு (Press release) எண்.2179, நாள்:31.10.2023) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *