கலந்தாய்வு
மருத்துவக் கல்விக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான கலந்தாய்வு இன்று (21.8.2024) இணையவழியில் தொடங்குகிறது. சிறப்புப் பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் நாளை (22.8.2024) நேரடியாக கலந்தாய்வு நடைபெறுகிறது.
தத்தெடுக்கலாம்
திருமணம் ஆகாதோர், இணையரை இழந்தவர், விவாகரத்து செய்தவர், சட்டப்படி பிரிந்து வாழ்பவர் உள்ளிட்டோரும் இனி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் புதிய வழி காட்டுதல் வெளியிட்டுள்ளது.
அவகாசம்
தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிப்பதற் கான கால அவகாசம் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திறன் பயிற்சி
இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று ஆக்ஸ்ஃபோர்டு பன்னாட்டு கல்வி சேவைகள் மய்யம் அறிவித்துள்ளது.
உத்தரவு
மருத்துவக் கல்லூரிகளில் போதைப் பொருள் புழக் கத்தை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேவை குறைப்பு
பயணிகள் வருகை குறைவால், நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் இனி வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படும் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாராட்டு…
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பெண் குழந்தைகள் முன்னேற படிக்கல்லாக அமையும் என அரசுக்கு உயர்நீதி மன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
செய்திச் சுருக்கம்
Leave a Comment