யுபிஎஸ்சி க்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். மூலம் அரசுப் பணியாளர்கள் தேர்வு: இட ஒதுக்கீட்டை பறிக்கும் ஒன்றிய பிஜேபி அரசு: ராகுல் காந்தி

2 Min Read

புதுடில்லி, ஆக.19- ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் இயக்குநர் பதவிகளில் 45 அதிகாரிகளை நேரடியாக நியமிப்ப தற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். “இடஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்பட்டு உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பல்வேறு துறை களில் 10 இணை செயலா ளர்கள், 35 இயக்குநர்கள் மற்றும் துணை செயலாளர்கள் என 45 அதிகாரிகள் லேட்ரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வா ணையம் (யு.பி.எஸ்.சி.) நேற்று முன்தினம் (17.8.2024) அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
பொதுவாக இத்தகைய பதவிகள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ்.போன்ற சிவில் சர் வீஸ் மற்றும் குரூப் ஏ போன்ற அனைத்து இந்திய பணி அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.

தற்போது இந்தப் பணிகளுக்கு நேரடியாக ஆட்களை நியமிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதன் மூலம் மேற்படி நியமனத்தில் இடஒதுக்கீடு முறை ஒழிக்கப்படுவதாக குற்றம் சாட்டி இருந்தன. அந்தவகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடி யுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
யு.பி.எஸ்.சி.க்கு பதிலாக ஆர். எஸ்.எஸ். மூலம் பொது ஊழி யர்களை தேர்வு செய்வதன் மூலம் பிரதமர் மோடி அரசியல்சாசனம் மீது கடுமையான தாக்குதல் நடத்தி இருக்கிறார்.

ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் முக்கியமான பதவிகளை நேரடியாக நிரப்புவதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்பட்டு உள்ளது.
உயர்மட்ட அதிகாரிகள் உள் பட நாட்டின் முக்கிய பதவிகளில் பின்தங்கிய பிரிவினரின் பிரதிநிதித்துவம் இல்லை என நான் எப்போதும் கூறிவருகி றேன். இதை சரிப்படுத்துவதற்கு பதிலாக நேரடி நியமனத்தால் மேலும் மோசமாக்குகின்றனர்.
இது யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக தயாராகி வரும் திறமையான இளைஞர்களின் உரிமையை திருடுவது மட்டுமின்றி, பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி கருத்து மீதான தாக்குதலும் ஆகும்.
ஒரு சில கார்பரேட் நிறுவ னங்களின் பிரதிநிதிகள் முக்கியமான அரசுப் பதவிகளில் அமர்ந்து என்ன செய்வார்கள்? என்பதற்கு ‘செபி’ ஒரு தெளி வான உதாரணம் ஆகும்.

அங்கு முதல்முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர் தலைவராகி பெரும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
நிர்வாக அமைப்பு மற்றும் சமூக நீதியை பாதிக்கும் பிரதமர் மோடியின் இந்த தேச விரோத நடவடிக்கையை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும். அய். ஏ.எஸ். பதவிகளை தனியார்மயமாக்குவது இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர மோடியின் உத்தரவாதம் ஆகும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *