திருவாரூர் மாவட்டத்தில் தெருமுனைப் பிரச்சாரம்

1 Min Read

அரசியல்

திருவாரூர், ஆக.10 – திருவாரூர் மாவட்டத்தில் பகுத்தறிவு ஆசிரியர் அணியின் வைக்கம் 100 ஆண்டு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100 ஆண்டு, தோள் சீலைப் போராட்டம் 200ஆம் ஆண்டு ஆகிய விழாக்களின் தெருமுனைப் பிரச்சாரம் 3ஆவது நாளாக பவித்திர மாணிக்கம் பெரி யார் சிலை அருகில் 2.8.2023 மாலை 6 மணி அளவில் தொடங்கி இரவு 10 மணி வரை, தலைமைக் கழக செய லாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலை மையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.சிவக்குமார், திருவாரூர் நகர கழக செயலாளர் ப.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரும், கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சேகர் (எ) கலியபெருமாள் தொடக்க உரை, ஆற்றினார்.

தொடர்ந்து இலவங்கார்குடி ஊராட்சி மன்றத் தலைவர் இராஜ.இளங்கோ, மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கே.சங்கர், இரு தயசாமி, கூட்டுறவு சங்கத் தலைவர் சோழா நடராஜன் வார்டு உறுப்பினர் ராஜமாணிக்கம், தை.சேட்டு ஆகி யோர் கலந்துகொண்டு உரையாற் றினார்.

இறுதியில் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் கோ.செந்த மிழ்ச் செல்வி மூன்று விழாக்களின் வரலாற்றையும், நம் சமுதாயம் அடைந்த முன்னேற்றங்களையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

சிறப்புரையாக கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி தலைப் புக்கேற்ப இயக்க வரலாற்றினை எடுத்துரைத்து சனாதனவாதிகளால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளை விளக்கி யும், மணிப்பூர் பற்றி எரிவதைப் பற்றிய உண்மைகளையும் ஆதாரங்களோடு பேசி முடித்தார்.

கூட்டத் தொடக்கத்தில்  இயக்கப் பாடகர்கள் பாவலர் க.முனியாண்டி, புலவர் ஆறுமுகம், கலைச்செல்வம் ஆகியோர் கொள்கைப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர். இளைஞரணி தோழர் தமிழ்வாணன் நன்றி கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *