சென்னை, ஆக.18 தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பு இல்லை என பொது சுகாதாரத்துறை அறிவித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை வேகமாக பரவிய நிலையில், சுவீடன் நாட்டிலும் இந்த நோயின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பரவலை அவசர நிலையாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைப்பொறுத்தவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.