ஒன்றிய அரசின் சுரண்டல் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாததால் அபராதம் வசூல்

3 Min Read

புதுடில்லி, ஆக 10 சர்வீஸ் சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டணங்களை தனியார் வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் 35 ஆயிரம் கோடி ரூபாயை வாடிக்கையாளர் களிடம் வசூலித்து உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் வாடிக்கையாளர் களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வங்கியிலும் வாடிக் கையாளர்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்கிற்கேற்ப குறைந்த பட்ச இருப்புத் தொகை இவ்வளவு ரூபாய் வைத்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளது. அதற்கு கீழ் இருந்தால், இருக்கும் பணத்தில் இருந்தே அபராதத்தை எடுத்து விடுவார்கள். உதாரணத்திற்கு உங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை 1000 ரூபாய் என்று வைத்து கொள்வோம். அதற்கு அர்த்தம் என்ன என்றால், தினமும், அந்த நாள் முடியும் சமயம், உங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் வைத்திருக்க இருக்க வேண்டும்.

இப்படி அந்த மாதம் முழுவதும், தினமும் ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும். மொத்தமாக கணக் கிட்டால், 30 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் தினமும் ஆயிரம் ரூபாய் வீதம் அந்த மாதத்தில் 30 ஆயிரம் ரூபாய் இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் குறைந்தபட்ட தொகை இருப்பில் வைக்கவில்லை  என்று கட்டணம் வசூலிப்பார்கள். 

இந்நிலையில், சர்வீஸ் சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டணங்களைத் தனியார் வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் 35 ஆயிரம் கோடி ரூபாயை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து உள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. 

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச பணம் தனது சேமிப்புக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்பது வங்கிகளின் விதிமுறை.அவ்வாறு கட்டணத்தை வைக்காதவர்கள் அதற்கான கட்டணத்தை வங்கிகள் வசூலித்து வருகின்றன. அதேபோல ஏடிஎம்களில் 5 முறை பணம் எடுக்க கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதற்கு மேல் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாலோ அல்லது வேறு வங்கிகளில் பணம் பரிவர்த்தனை செய்தாலோ கட்டணம் வசூலிக் கப்படுகின்றன. அதே போல் எஸ்எம்எஸ் அனுப்புவது உள் ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது வங்கிகள்.

குறிப்பாக 2018ஆம் ஆண்டு முதல் பொதுத்துறை வங்கிகள் மற்றும் முன்னணியில் உள்ள தனி யார் துறை வங்கிகளான ஆக்சிஸ், எச்டிஎஃப்சி, அய்சிஅய்சிஅய் இன் டஸ்ட்ரியல், அய்டிபிஅய் ஆகிய வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் தொகை விவரங்களை மாநிலங் களவையில் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்திருக்கிறார். அதன்படி வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்காமல் உள்ள வாடிக்கையாளர்களிடம் 5 ஆண்டுகளில் 21,44 கோடி ரூபாயை வங்கிகள் வசூலித்துள்ளன. அதே போல நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஏடிஎம்களில் கூடுதலாக பணம் எடுத்ததற்கான கட்டணமாக 8,289 கோடி ரூபாயும், குறுஞ்செய்தி அனுப்பும் சேவைக்காக 6,254 கோடியும் வங்கிகள் வசூல் செய்துள்ளன.  வங்கிகளில் மறை முகமாக வசூலிக்கும் தொகையை கண்காணிக்க நேரம் கூட இல் லாமல் வாழ்வாதாரத்திற்காக பலரும் போராடிக் கொண்டிருக்கின் றனர். ஆனால் இப்படி அநியா யத்துக்கு வசூலிக்கப்படும் சிறு சிறு தொகையையும் நீண்ட நாட்களுக்கு கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு தனிநபரும் தேவையில்லாமல் பெரிய தொகையை கட்டணமாக செலுத்தி இருப்போம். எனவே ஒவ்வொரு தனி நபரும் வங்கிகளின் விதிமுறையை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் நமது சேமிப்பை இழக்காமல் இருக்கலாம். அதேபோல டிஜிட்டலை ஊக்கு விக்கும் அரசுகளும் தேவையில் லாமல் வங்கிகள் கட்டணத்தை வசூலிப்பதை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்த வேண்டியது அவ சியமாக இருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *