“நாடாளுமன்றத் தேர்தல் 2024 40/40 தென் திசையின் தீர்ப்பு” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நூல் நாளை வெளியீடு

viduthalai
2 Min Read

சென்னை, ஆக.15- தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் தலைமையில் நடை பெறவுள்ள தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “நாடாளுமன்றத் தேர்தல் 2024 – 40/40 தென் திசையின் தீர்ப்பு” வர லாற்றுத் தேர்தல் ஆவண நூல் வெளியிடப்படுகிறது. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட தி.மு.க. பொருளாளரும் நாடா ளுமன்ற மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பெற்றுக் கொள்கிறார்.

சர்வாதிகாரத்திற்கும் ஜன நாயகத்திற்கும் இடையே நடந்த போர்தான் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல். “400 இடங்களை கைப் பற்றுவோம்’’ எனச் சொன்ன பாஜக-வை தனித்து அரசு அமைக்க முடியாத நிலை மையை உருவாக்கியது இந்தியா கூட்டணி. இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்த பிரதமர் மோடியை, அண்ணல் அம்பேத்கர் அளித்த அரசியல் சாசன சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறது திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி.

தமிழ்நாடு – புதுச்சேரியில் நாற்பதுக்கு நாற்பது என்கிற வரலாற்று வெற்றியை திமுக கூட்டணி பெற்றது. அந்த சரித்திர சாதனையை ஆவணமாக பதிவு செய்கிறது முதலமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘40/40 தென் திசையின் தீர்ப்பு’ புத்தகம்.

இந்நூலினை சென்னை, கலைஞர் அரங்கில் வருகிற நாளை 16.8.2024 காலை நடைபெற உள்ள “தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட, தி.மு.க. பொரு ளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., பெற்றுக் கொள்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றியை திமுக கூட்டணி எப்படிச் சாத்தியமாக்கியது?, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த தேர்தல் வியூகம், 2023-இல் இந்தியா கூட்டணிக்கு விதை போட்ட சென்னை ஒய்.எம்.சி.ஏ-வில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்த இந்தியா கூட்டணிக் கூட்டங்கள், திமுக வாக்குச்சாவடி பொறுப் பாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிலரங்கம், கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நடந்த தொகுதிப் பங்கீடு, திமுக தேர்தல் அறிக்கை, தி.மு.க. வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள், பல்வேறு ஊடகங் களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்புப் பேட்டிகள், திமுகவின் தேர்தல் விளம் பரங்கள், 40/40 வெற்றியை தந்த தேர்தல் முடிவுகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வென்ற தேர்தல்கள், புள்ளிவிவரங்கள், ஏராளமான படங்கள், இன்ஃபோகிராபிக் என விரிவாகப் பதிவு செய்தி ருக்கிறது ‘தென் திசையின் தீர்ப்பு’ நூல். 40/40 வரலாற்றுச் சாதனையை பதிவுசெய்துள்ள சான்றாவணமாக, ஓர் வர லாற்றுத் தேர்தல் ஆவணமாக இந்த புத்தகம் திகழ்கிறது என்றால் மிகையில்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *