பெரியார் மருத்துவக் குழுமத்தின் கீழ் இயங்கும் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையின் துணை செவிலியர் பயிற்சி நிறைவுற்று அம்மாணவர்களுக்கு இன்று (14.08.2024) சான்றிதழ் வழங்கப்பட்டது.
2023-2024ஆம் கல்வியாண்டில் 16 மாணவர்கள் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் துணை செவிலியர் பயிற்சி பெற்றனர். அவர்களின் பயிற்சி நிறைவுற்றதை தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அம்மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். உடன் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மருத்துவர் பி. மஞ்சுளாவாணி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர்
கோ. கிருஷ்ணமூர்த்தி, செவிலியர்கள் வி. ஹெலன், ரா. காமாட்சி, ஜா. ரகமத் நிஷா மற்றும் ஆர். ஹேமமாலினி உள்ளனர்.