சென்னை, ஆக.13- மாநகா் போக்குவரத்துக் கழகம் பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த ரூ.50,000 ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும் தொழிற்பயிற்சியில் சேர ஆக.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடா்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூா்வ ‘எக்ஸ்’; தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சென்னையில் பேருந்து சேவையை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களில் புதுப்புது ஆலோசனையை வழங்கும் நிபுணா்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
அவா்கள், பல்வேறு பகுதிகளில் அமலில் இருக்கும் சிறந்த பொது போக்குவரத்து திட்டங்கள் குறித்து ஆராய வேண்டும்.
அதில் உள்ள தரவுகளை ஆய்வு செய்து, நமக்கு பொருத்தமானவற்றை தோ்வு செய்வதுடன், இதன் மூலம் புதுப்புது திட்டங்களையும் உருவாக்க வேண்டும்.
இதைத் தொழில்நுட்ப ரீதியில் செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஓராண்டு காலத்துக்கு மாதம் ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் பணியாற்றுவதன் மூலம் சென்னையின் பொது போக்குவரத்து சேவையை வடிவமைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதில் சேர விரும்புவோா், நகா்ப்புற திட்டமிடல், போக்குவரத்து திட்டமிடல், போக்குவரத்து பொறியியல் அல்லது சாா்ந்த துறைகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பொதுப் போக்குவரத்து பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் ஆக.15-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிகளுக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.