ஈரோடு, ஆக. 12- தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங் களிலும் புற்றுநோய் குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு உயா்சிகிச் சைப் பிரிவில் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டண சிகிச்சைப் பிரிவை அமைச்சா்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (11.8.2024) திறந்துவைத்து ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், அமைச்சா் மா.சுப்பி ரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சி அமைந்ததும் ஈரோடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறு வோர் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அனைத்து மாவட்ட தலைநகரங்க ளிலும் உள்ள அரசு மருத்துவமனை களில் கட்டண சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்த முடிவு எடுக் கப்பட்டுள்ளது.
அதன்படி கோவை, மதுரை, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கட் டண சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல ஈரோடு அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் கூடிய கட்டண சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண சிகிச்சை பிரிவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகள், தனி கழிப்பறை, குளியலறை, தொலைக்காட்சி பெட்டி போன்ற வசதிகள் இருக்கும்.
இதற்கான கட்டணம் குறித்து ஓரிரு நாள்களில் அதிகாரிகள் அறிவிப்பா். ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியா குமரி, திருப்பத்தூா் ஆகிய 4 மாவட்டங்களில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை, ரப்பா் உற்பத்திக் கழிவுகளால் புற்று நோய் பாதிப்பு அதிகம் இருப்ப தாக சொல்லப்பட்டது.
இதனால், இந்த 4 மாவட்டங் களில் வசிக்கும் 9.82 லட்சம் பேருக்கு புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 4.19 லட்சம் போ் பரிசோதனை செய்துகொண்டனா்.
இவா்களில் 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 1.27 லட்சம் போ் பரிசோதனை செய்துகொண்டதில் 50 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் இந்த ஆண்டு நடத்தப்படும் என்றார்.