திருச்சி, ஆக. 10- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தினை 09.08.2024 அன்று கோயம்புத்தூரில் துவக்கி வைத்து சிறப்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ்ப்புதல்வன் திட்டத் தில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டயப்படிப்பு மாண வர்கள் மு. தர்ஷன், எம். முகமது இர்ஷாத் மற்றும் ப. போஸ் ஆகி யோருக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் வங்கி பற்று அட்டையினை வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்து சிறப்பித்தார்.
திருச்சி மாவட்டத்தில் 12,655 மாணவர்கள் பயன்பெறக்கூடிய இத்திட்டத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் 17 பேர் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

