சென்னை, ஆக. 7- உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வருகிற 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகிற 13ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த அமைச்சரவை கூட் டத்தில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், முதலமைச்சர் வெளிநாடு செல்லும்போது அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியது வழக்கமான நடைமுறையாக உள்ளது. அதன்படி, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவுள்ளது.