அகமதாபாத், ஆக.3- மருத்துவக் கல்வியில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவிவரும் சூழ்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற் படுத்தியது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர், சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண் பெற்று இருந்தார். மாநிலமே அவரை கொண்டாடிய நிலையில், பிளஸ்-2 தேர்வில் அந்த மாணவி தோல்வி அடைந்தவர் என்ற உண்மை வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.
அதுவும் அவர் இயற் பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் குறைந்த மதிப்பெண்களை எடுத்து தோல்வி அடைந்து இருந் தார். இவ்வாறு முக்கிய பாடங்களில் தோல்வி அடைந்த ஒருவரால் நீட் தேர்வில் எப்படி வெற்றி பெற முடிந்தது என்ற கேள்வி எழுந்தது.
இதனிடையே அந்த மாணவி ஜூன் மாதம் நடந்த பிளஸ்- 2 துணைத்தேர்வை எழு தினார். அதிலும் அவர் குறிப்பிட்ட அந்த 2 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது இந்த விவகாரம் நாடு முழுவதும் மீண் டும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.