அந்தோ கொடுமை! வயநாடு உயிரிழப்பு முந்நூறைக் கடந்தது நிவாரண முகாமில் ராகுல் – பிரியங்கா ஆறுதல்

viduthalai
2 Min Read

வயநாடு, ஆக.2 கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-அய் தாண்டியுள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியை ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் நேற்று (1.8.2024) பார்வையிட்டனர். நிவாரண முகாம்களில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெருமழை காரணமாக முண்டக்கை, சூரல் மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நூற்றுக் கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகள் இருந்த தடயமே தெரியாத அளவுக்கு அப்பகுதி முழுவதும் சேற்று மண்ணால் மூடப்பட்டுள்ளது

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் நேற்று 3-ஆவது நாளாக மீட்புப் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இங்கு தோண்ட தோண்ட உடல்கள் கிடைத்து வருகின்றன. உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-அய் தாண்டியுள்ளது. இறந்தவர்களில் இதுவரை 100 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று காலை வரை 256 உடல்களுக்கு உடற்கூராய்வு முடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து 221 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 91 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி மேனாள் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவும் நேற்று (1.8.2024) கேரளா வந்தனர்.

தேசிய பேரழிவு

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழை நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால் மற்றும் நிர்வாகி கள் உடன் இருந்தனர். பின்னர், செய்தியாளர் களிடம் ராகுல் காந்தி கூறும்போது, ‘‘நிச்சயமாக இது ஒரு தேசிய பேரழிவு. ஆனால், அரசு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், வீடுகளையும் இழந்திருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் அவர்களிடம் பேசுவதே மனதுக்கு துன்பமாக இருக்கிறது. இது எனக்கு மிகவும் கடினமான நாளாக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க, நாங்கள் முழு முயற்சி செய்வோம்” என்றார்.

பிரியங்கா காந்தி கூறும்போது, “பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவவும், எங்களால் முடிந்த ஆதரவையும், ஆறுதலையும் வழங்கவே இங்கு வந்துள்ளோம்” என்றார்.

நிலச்சரிவு

நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு, ராகுல் காந்தி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது: பேரழிவு மற்றும் சோக காட்சிகளை கண்டது, இதயத்தை மிகவும் வேதனைப ்படுத்தியது. இந்த கடினமான நேரத்தில் நானும், பிரியங்காவும் வயநாடு மக்களுடன் நிற்கி றோம். நிவாரணம், மீட்பு, மறுவாழ்வு பணிகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து, தேவையான அனைத்து உதவி களும் வழங் கப்படுவதை உறுதிசெய்வோம். நிலச்சரிவுகள் மற்றும் இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து நிகழ்வது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த பிரச்சினையில் ஒரு விரிவான செயல் திட்டம் அவசரமாக தேவை’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 31-ம் தேதியே ராகுலும், பிரியங்காவும் வயநாடு செல்ல திட்டமிட்டு இருந் தனர். தொடர் மழை மற்றும் மோச மான வானிலை காரணமாக, விமா னம் தரையி றங்கு வதில் சிக்கல் ஏற்ப டக்கூடும் என்பதால் பயணம் ஒருநாள் தள்ளிவைக்கப் பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *