டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்: மாவட்ட தலைநகரங்களில் நடக்கிறது.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* நீட் தேர்வுக்கு எதிராக கருநாடக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: பாஜக மற்றும் மஜத வெளிநடப்பு.
* நீட் தேர்வு தேவையா? தலையங்க செய்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மாநிலங்களவையில் வரிகள், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விவசாய வருமானம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நிட்டி ஆயோக் கூட்டத்தை பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் புறக்கணிக்கிறார். நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக காங்கிரசும் திமுகவும் அறிவித்த ஒரு நாள் கழித்து, பஞ்சாப் அரசு இந்த முடிவு.
* பட்ஜெட் செய்தி: அம்ரித் கால் அல்ல, கர்தவ்ய கால்.இடைக்கால பட்ஜெட் போன்ற இறுதி பட்ஜெட் நாம் எதிர்கொள்ளும் சவால்களை அங்கீகரிக்க மறுக்கிறது. மேலும் நாம் சமாளிக்க வேண்டிய குழப்பத்தை தீர்த்து வைப்பதை நம்மிடமே விட்டு விடுகிறோம் என்கிறார் கட்டுரையாளர் அனில் சூட்
தி இந்து:
* பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த மகிளா காங்கிரஸ் நாடு தழுவிய இயக்கத்தை தொடங்க முடிவு.
தி டெலிகிராப்:
* நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பயிற்சி பெற்ற பொருளாதார நிபுணர்’ இல்லை, சொந்தமாகவும் சிந்திக்கும் திறன் இல்லை: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கடும் தாக்கு.
– குடந்தை கருணா