பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட 12 ஆயிரம் புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளன நாடாளுமன்றத்தில் தகவல்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜூலை 25 ஒன்றிய அரசுத் துறைகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் (பிஎம்ஓ) பொது குறை தீர்வு தளம் (போர்ட்டல்) மூலமாக பெறப் பட்டவற்றில் 12,000 புகார்கள் நிலு வையில் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஒன்றிய பணி யாளர்கள் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின் விவரம்: https://www.pmindia.gov.in என்பது ஒன்றிய அமைச்சகம் அல்லது துறைகள் மற்றும் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் தொடர்புடைய பொதுவான குறைகளைப் பதிவு செய்வதற்கான ஒரு பொதுவான போர்ட்டலாகும். இந்தப் போர்ட்டல் மூலம் குறைகளை பதிவு செய்யும்போது பெறப்படும் அய்டி (அடையாள எண்) மூலம் பதிவு செய்யப்பட்ட புகார்களின் அப்போதைய நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.இதன்மூலம் பெறப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களால் பரவலாக்கப்பட்ட முறையில் தீர்க்கப்படுகின்றன. இவற் றில் பெரும்பாலானவை 30 நாட்களுக்குள் தீர்வு காணப் படுகின்றன என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

அமைச்சர் பகிர்ந்த தகவலின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் 58,612 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றுடன் முந்தைய ஆண்டில் நிலுவையில் இருந்த 34,659 புகார்களும் இணைத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 80,513 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 12,758 புகார்கள் நிலுவையில் உள்ளன.கடந்த 2023-ஆம் ஆண்டு 1,84,227 புகார்கள் பெறப்பட்டன (இவற்றில் முந்தைய ஆண்டில் இருந்து பெறப்பட்ட 19,705 புகார்களும் அடங்கும்). இவற்றில் 1,69,273 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டன. 34,659 புகார்கள் நிலுவையில் இருந்தன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள புகார்கள் குறித்த தகவல்களையும் அமைச்சர் பகிர்ந்து கொண்டார். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்பாக 46,696 புகார்கள் பெறப்பட்டன. (இவற்றில் சென்ற ஆண்டு நிலுவையில் உள்ள 25,724 புகார்கள் இணைக்கப்பட்டவில்லை). மொத்த புகார்களில் 46,219 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 26,201 புகார்கள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2023-ஆம் ஆண்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 91,973 புகார்கள் பெறப்பட்டன. முந்தைய ஆண்டு நிலுவையில் இருந்த 1,92,384 புகார்கள் சேர்ந்து மொத்தம் 2,58,633 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 25,724 புகார்கள் நிலுவையில் உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *