மன்னை, ஜூலை 23- ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தியும் இராமநாதபுரம் முதல் சேலம் வரை திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பாக இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை மாநில இளைஞரணி செயலாளரும் இரண்டாம் குழு தலைவர் நாத்திக பொன்முடி தலைமையில் காலை 11 மணிக்கு மன்னார்குடி மாவட்ட எல்லைக்கு வருகை தந்த குழுவை வரவேற்று சிறப்பித்த தோழர்களை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், தலைமையில் நீடாமங்கலத்தில் வரவேற்று தந்தை பெரியார் சிலைக்கு குழு தலைவர் நாத்திக பொன்முடி மாலை அணிவித்தார்.
கழக பேச்சாளர் தே.நர்மதா சிறப்புரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.பி.எஸ்.அன்பழகன், தலைமை கழக அமைப்பாளர் அதிரடி. அன்பழகன். பகுத் தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ் பகுத்தறிவாளர் கழக மன்னை நகரத் தலைவர் கோவி.அழகிரி, மாவட்ட துணைத் தலைவர் ந.இன்பக்கடல் மன்னை நகர இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன், நகர துணைத் தலைவர் வி.அழகேசன், திருப்பலாக்குடி எம்.கோவிந்தராஜ், பகுத்தறிவாளர் கழக சா.முரளிதரன், தொழிலாளரணி மாவட்ட செயலாளர் ஆட்டோ. மதி, இளைஞரணி மாவட்ட செயலாளர் க.இளங்கோவன், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவர் தா.வீரமணி, நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் தங்க.பிச்சகண்ணு, மன்னை ஒன்றிய தலைவர் மு.தமிழ்ச்செல்வன், கழக பேச்சாளர்கள் இராம.அன்பழகன், வழக்குரைஞர் சிங்காரவேலு, கருவாக்குறிச்சி கோபால், ஒன்றிய செயலாளர் சா.அய்யப்பன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.பி.குமார், கோட்டூர் ராமதாஸ், செ.இராம லிங்கம். இளைஞரணி மாவட்ட தலைவர், கா.ராஜேஷ்கண்ணன், மன்னை ஒன்றிய துனை. செயலாளர் புலவர்.கோ.செல்வம். இளைஞரணி ஒன்றிய தலைவர் கா.சேகர், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளர் நா.ரவிச்சந்திரன், கோயில் வெண்ணி கிளைக் கழக செயலாளர் தா.சரவணன், வடுவூர் இளைஞரணி தோழர் உலகநாதன், ஆசையொளி, ஒன்றிய மேனாள் செயலாளர் புள்ளவராயன் குடிகாடு கலியமூர்த்தி, பகுத்தறிவு ஆசிரியரணி ஒன்றிய அமைப்பாளர் கா.முரளி, மாணவரணி சோத்திரை சாருகான், கிருஷ்ணாபுரம் கலையரசன், அருளரசன், காளாச்சேரி சரண், கோயில்வெண்ணி கோபாலகிருஷ்ணன், அஜீதன், நகர் பாலகிருஷ்ணன், வாசுதேவமங்கலம் பிரசாத், கருவாக்குறிச்சி மாணவரணி, சீனு, சந்தோஸ், முத்துக்குமார், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை குருசாமி மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.