உ.பி.யில் நடப்பது மக்களாட்சி தானா?

2 Min Read

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் ஏப்ரல் 7 அன்று நிலப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பி னருக்கு இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த வன்முறையில் முக்கிய குற்றவாளியான பாஜக பிரமுகர் ரிங்கு சிங் என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ரவுடி ரிங்கு சிங் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளை சட்டவிரோத கட்டடம் என்று ஜான்சி நிர்வாகம் இடித்துத் தள்ளியது இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத் தியது. 14ஆம் தேதி ரிங்கு சிங்கிற்கு பிணை வழங்கப்பட்டது.
இதனை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
சிறைவாசலில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் பெரிய மாலைகளோடு காத்திருந்து. அவரை வரவேற்றனர்.
மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தவரை காலை முதல் மாலை வரை ஜான்சி நகரம் முழு வதும் பாஜக தொண்டர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

பல புல்டோசர்கள் முன்னும் பின்னும் செல்ல நடுவில் சொகுசு காரின் கூரையில் ரிங்குவை உட்கார வைத்து 65 கி.மீ. ஊர்வலம் சென்றது. நகரம் முழுவதும் பட்டாசுகளை வெடித்தும், அதிக இரைச்சலில் பாட்டுகளை ஒலிக்கவிட்டும் அமளி துமளியில் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதில் இரண்டு ஆம்புலன்சுகள் சிக்கிக்கொண்டதால் நோயாளிகளை ஆம்புலன்சில் இருந்து இறக்கி மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு செல்லும் அவலமும் நிகழ்ந்தது. இது தொடர்பாக யாருமே புகார் அளிக்காததால் காவல்துறையும் – குண்டரும் பாஜக பிரமுகருமான ரிங்கு சிங்மீது – எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லையாம்!

உத்தரப்பிரதேச பிஜேபி அரசு பாசிசத்தின் மறுபதிப்பாக நிர்வாண ஆட்டம் போடுகிறது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மரண அடி வாங்கினாலும், அதனுடைய பாசிச மத விரோதக் குரோத புத்தி கொஞ்சம்கூடக் குறையவில்லை.
தண்டனை விதிக்கப்பட்டு, சிறைக்குச் சென்று பிணையில் வந்த குற்றவாளியை, வெற்றி வீரர் போல தூக்கிக் கொண்டாடுவது என்பது எந்த வகையில் நியாயப்படுத்தப்படக் கூடியது?
‘‘80க்கும் 20க்கும் இடையிலான போர்தான் உ.பி. தேர்தல்’’ என்று சொன்னவராயிற்றே அம்மாநில முதலமைச்சர் காவி வேட்டி யோகி ஆதித்யநாத்.
இதன் பொருள் 80 விழுக்காடு இந்துக்களுக்கும், 20 விழுக்காடு முஸ்லீம்களுக்கான போர் என்பதாகும்.
இந்தப் பேச்சுக்காகவே இவர் சிறையில் இருக்க வேண்டியவர். சற்றும் வெட்கமின்றி, மோடிக்கு அடுத்து அவர்தான் பிரதமர் என்று சொல்லும் அளவுக்கு மதவெறித்தனம் தலைக்கொழுத்து ஆட்டம் போடுகிறது – வெட்கக் கேடே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *